Friday, October 21, 2011

கீழக்கரை நகராட்சி தலைவர்! முதல்முறையாக அதிமுக வெற்றி !வாக்கு விபரம்!




ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ராபியத்துல் காதரியா வெற்றி பெற்றார்.மேலும் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட வேட்பாளர்களில் அதிமுக சார்பில் ஆறு பேர்களும்,திமுக சார்பில் நான்கு பேர்களும்,காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒருவரும் ,10 சுயேட்சை வேட்பாளர்களும் வெற்றி பெற்றுள்ளனர்.




கீழக்கரை மொத்தம் 21 வார்டுகள் உள்ளன.இதில் மொத்தம் பதிவான வாக்குகள் 12 ஆயிரத்து 712 இதில் ராபியத்துல் காதரியா(அதிமுக) 3 ஆயிரத்து 702 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

அவருக்கு அடுத்தப்படியாக ஆபிதாபேகம்(டீச்சர்)(சுயே)2ஆயிரத்து 930 வாக்குகளும்,


தாஜீன் நிஷா(திமுக)2 ஆயிரத்து 655 வாக்குகளும்,



கதிராயி(சுயே) ஆயிரத்து 26 வாக்குகளும்,




ஜீனத் மரியம்(தேமுதிக)731 வாக்குகளும்,




ஆயிஷத்துல் முபஸ்ஸரா(காங்)331 வாக்குகளும்,




மெஹர் பானு(சுயே),தமுமுக ஆதரவு 608 வாக்குகளும்,




ரஹமத் நிஷா(புதிய தமிழகம்)147 வாக்குகளும்,




மெகர்நிஷா(சுயே)133 வாக்குகளும்,




ஆயிஷத் (சுயே)449 வாக்குக‌ளும் பெற்றனர்.

12 comments:

  1. வாழ்த்துக்கள்! மாநிலத்தில் ஆளும் கட்சியை சேர்ந்தவரே நமது ஊரிலும் வென்று இருப்பதால், கட்சியின் செல்வாக்கைப் பயன்படுத்தி, நமது ஊரின் அவசிய / அவசர தேவைகளை எளிதாக நிறைவேற்றலாம் (நிறைவேற்ற வேண்டும்!!). வெறும் அரசியல்வாதிகளின் வெற்று வாக்குறுதிகளைப் போல அல்லாமல், ஊரின் மீது உண்மையான அக்கறை கொண்டு, ஊரின் மேம்பாட்டுக்காக உழைக்க வெற்றி பெற்ற சகோதரிக்கு மீண்டும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள்! மாநிலத்தில் ஆளும் கட்சியை சேர்ந்தவரே நமது ஊரிலும் வென்று இருப்பதால், கட்சியின் செல்வாக்கைப் பயன்படுத்தி, நமது ஊரின் அவசிய / அவசர தேவைகளை எளிதாக நிறைவேற்றலாம் (நிறைவேற்ற வேண்டும்!!). வெறும் அரசியல்வாதிகளின் வெற்று வாக்குறுதிகளைப் போல அல்லாமல், ஊரின் மீது உண்மையான அக்கறை கொண்டு, ஊரின் மேம்பாட்டுக்காக உழைக்க வெற்றி பெற்ற சகோதரிக்கு மீண்டும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. CONGRATULATION TO ALL THE CANDIDATES FOR PARTCIPATED THE CHAIRMEN ELECTION.MY BEST WISHES TO MRS.RABEEATHUL KATHARIYA(ISMAIL SISTER)1ST TIME VICTORY,PLS I REQUEST TO WE ALL R CAN MAKE OUR BETTER CITY,&IMPROVE OUR HOMETOWN,HEALTH IS WEALTH!

    ReplyDelete
  4. வெற்றி பெற்ற சகோதரிக்கு வாழ்த்துக்கள்.ஊரின் நலனுக்காக
    அனைவரும் ஒத்துழைப்பு கொடுப்போமாக.

    எந்தவித அரசியல் நிர்பந்தக்களுக்கும்
    எந்தநிலையிலும் எந்த வகையிலும்
    அடிபணியாமல் குடும்பகண்ணியம்,சமுதாயத்தின் கண்ணியம்,ஊரின் கண்ணியம் காத்து
    ஊரின் நலன் ஒன்றே குறிக்கோளாகக்
    கொண்டு நகராட்சியை ஆட்சிசெய்ய எல்லாம் வல்ல அல்லாஹ் இவருக்கு
    மனவலிமையையும் ,உடல்வலிமை
    -யையும் தருவனாக.ஆமீன்

    ReplyDelete
  5. தெற்குத் தெருவான்October 21, 2011 at 4:49 PM

    சகோதரி ராபியத்துல் காதரியா அவர்களுக்கு,
    உங்கள் ஊர் சகோதரனின் நெஞ்சார்ந்த முகமன்கள்.


    அ. தி. மு.க வின் அதிகாரபூர்வ நகராட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட நீங்கள் கட்சி பாகுபாடு இல்லாமல் நமது ஊர் மக்களின் நலன் கருதி அடிப்படை பிரச்சனைகளை கருத்தில் கொண்டு அதை சரி செய்வதில் உங்களின் கவனத்தை செலுத்தி அணைத்து மக்களின் வாழ்த்துக்களைப் பெற முயற்சி செய்யுங்கள்.

    நாங்கள் உங்களுக்கு துணையாய் இருப்போம்,

    அன்புடன்
    தெற்குத் தெருவான்

    ReplyDelete
  6. வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துக்கள், ஊரின் நலத்திட்டங்கள் அனைத்தும் நல்ல படியாக, ஆளும் கட்சி துணையுடன் நடத்திட வாழ்த்துக்கள்............

    ReplyDelete
  7. வெற்றி பெற்ற சகோதரி, ராபியத்துல் காதரியா அவர்களுக்கு வாழ்த்துகள்..! தேர்தலுக்கு முன் நாம் எத்தனையோ அணிகளாக பிரிந்திருந்தாலும், இனி ஓர் அணியாக ஒன்றிணைந்து ஆட்சிக்கு ஆதரவு தந்து, நல்லாட்சி மலரச் செய்ய வேண்டும்..இன்ஷா அல்லாஹ்.

    ReplyDelete
  8. Ahamed Kuthubdeen RajaOctober 21, 2011 at 9:12 PM

    அல்ஹம்துலில்லாஹ் ! வெற்றி பெற்ற சகோதரிக்கு நல்வாழ்த்துகள்.கீழக்கரை மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற உங்கள் எண்ணத்தையும், வாக்குறுதியையும் ,இன்ஷா அல்லாஹ் செயல்படுத்துங்கள்.
    ஓற்றுமையையும், ஊர் வளர்ச்சியையும் சீர்குழைக்கும் தீய சக்திகளிலிருந்து வல்ல அல்லாஹ் உங்களை பாதுகாத்து நன்மையான காரியங்களுக்கு வல்ல அல்லாஹ் உங்களுக்கு துணை புரிவானாக!ஆமீன்

    ReplyDelete
  9. வாழ்த்துக்கள்,நமது ஊர் மக்களின் நலன் கருதி அடிப்படை பிரச்சனைகளை கருத்தில் கொண்டு அதை சரி செய்வதில் உங்களின் கவனத்தை செலுத்தி அணைத்து மக்களின் வாழ்த்துக்களைப் பெற முயற்சி செய்யுங்கள்.

    ReplyDelete
  10. அஸ்ஸலாமு அலைக்கும்
    சகோதரி ராவியத்து கதரியா அவர்களை தமிழகத்தில் அம்மா கீழக்கரையில் இனி நீங்கள்! இன்ஷா அல்லாஹ்

    ReplyDelete
  11. அஸ்ஸலாமு அழைக்கும்.
    வாழ்த்துக்கள்! தோழனே!
    உங்களது பணிகள் மார்க்கத்தின் முறைப்படியும், ஜனநாயக முறைப்படியும், உங்களை நம்பி வாக்களித்த அன்பு ஜீவன்களுக்கும், ஊரின் பொதுவான காரியங்களுக்கும், மற்றும் அனைத்து தரப்பு மக்களுக்கும் உதவும்படியும், சிறப்பாக நடைபெறுவதற்கு எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் துஆ செய்துவரும்...
    பிரியமுடன்,
    கீழை ஜுஜு(எ)'`-ஜிஃப்ரீ,
    துபாய்.

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.