Sunday, October 30, 2011

கீழக்கரை வழியாக காரைக்குடி-கன்னியாக்குமரி ரயில் பாதைக்கு 1958.81கோடி

தங்கம் ராதாகிருஸ்னன்

கீழக்கரை சமூக நல நுகர்வோர் சேவை இயக்கத்தின் கூட்டம் அதன் தலைவர் அமானுல்லா தலைமையிலும் செயலாளர் தங்கம் ராதாகிருஸ்னன் முன்னிலையிலும் நடைபெற்றது.
கூட்டத்தில் தங்கம் ராதாகிருஸ்ணன் கூறியதாவது,தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் ரயில்வே துறைக்கு அனுப்பப்பட்ட தகவலின் அடிப்படையில் காரைக்குடி ,ராமநாதபுரம் ,கீழக்கரை ,கன்னியாக்குமரி வழியாக புதிய ரயில் பாதை திட்டம் ஆய்வு செய்யப்பட்டு ஆகஸ்ட் 30ல் ரயில்வே போர்டுக்கு அனுப்பப்பட்டுவிட்டது. இதில் காரைக்குடி முதல் ராமநாதபுரம் வரை 214.81 கிலோ மீட்டர் இதற்கான திட்ட செலவு 878.82 கோடி எனவும்.ராமநாதபுரம் முதல் கன்னியாகுமரி வரை 247.66 கிலோ மீட்டர் இதற்கான திட்ட செலவு1079.99 கோடி எனவும் ஆக மொத்தம் 1958.81 கோடி இதற்கான திட்ட செலவு என ரயில்வேதுறைக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அனுப்பியுள்ளனர். இதற்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம் என்றார்.

இது தொடர்பாக சமூக நல ஆர்வலர் ஒருவர் கூறியதாவது, இந்த திட்ட மதிப்பீடு ரயில்வே துறையின் உயர்மட்டக்குழு பரிசீலனைக்கு பிறகு மத்திய நிதி அமைச்சகத்தின் ஒப்புதலை பெற வேண்டும்.அதை தொடர்ந்து ஏராளமான பணிகள் பாக்கியுள்ளன இவை அனைத்தையும் விரைவாக மத்திய அரசு செய்ய வேண்டும் அப்போதுதான் இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வரும். இத்திட்டம் தொடர்பாக தொடர்ந்து வலியுறுத்தி கொண்டிருக்கும் சமூக நல சேவை இயக்கத்தினர் பாராட்டுக்குறியவர்கள்.இது வரை தொகுதி மக்களின் நல்னுக்காக பாராளுமன்றத்தில் பெரிய அளவில் எந்த கோரிக்கையையும் வைக்காத நமது ரித்தீஸ்.எம்பி இந்த திட்டத்தையாவது நிறைவேற்ற குரல் கொடுக்க வேண்டும்.

4 comments:

  1. மங்காத்தவின் தங்கச்சி மகன்October 30, 2011 at 7:42 PM

    ஊரில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக கடுமையான மழை அதனால் உடல் சோர்ந்து சோம்பலாக இருந்தது

    இந்த செய்தியை படித்ததும் குலுங்க குலுங்க சிரித்து உடல் சுறுசுறுப்பு கண்டது

    இந்த திட்டம் ரயில்வே துறையில் ஆய்வு நிலையிலேயே உள்ளது ஆய்வு அறிக்கையின்படி சுமார் இருஆயிரத்து கோடிக்ககான திட்டம்.
    ஒரு சமயம் திட்டம் நிறைவேறக்கூடிய நிலை வருமானால் ( நிச்சயமாக உறுதியாக இந்த நூற்றாண்டில் வரக்கூடிய சூல்நிலை கிடையாது)மத்திய அரசின் ரயில்வே திட்டங்களை நிறைவேற்ற கடந்த கால செயல் பாடுகளை திருப்பி பார்த்தால் திட்டம் நிறைவேற 5000 கோடிக்கு மேல் பிடிக்கும்

    மீதியை உங்களின் மேலான சிந்தனைக்கு விட்டுவிடுகிறோம்

    ஒரு மலரும் நினைவு
    1950 களில் நமதூர் ஹமீதியா உயர்நிலைப் பள்ளி விளையாட்டு திடலில் ஒரு அரசு விழா நடந்தது அதில் அன்றைய தமிழக முதல் அமைச்சர் மரியாதைக்குரிய திரு. காமராஜர் அவர்கள் கலந்து கொண்டு ராமநாதபுரத்திலிருந்து கீழக்கரை, சாயல்குடி வழியாக ரயில் பாதை உறுதியாக அமைக்கபடும் என்று கூறி சென்று(றே) விட்டார்கள்

    அதற்கு பின் வந்த ஆட்சியாளர்கள் யாரும் அந்த திட்டத்தை கண்டு கொள்ள வில்லை

    நண்பர் தங்கம் ராதாகிருஷ்னன் அவர்களின் விடாத தொடர் முயற்சியால் ரயில்வே துறையிலிருந்து ஏதோ ஒரு பதில் வந்திருக்கிற்து. என்ன சொல்லுவது என்றே புரியவில்லை. நல்லதையே நினைப்போம் அதற்காகவே மனமுருக வல்ல இறைவனிடம் பிரார்திப்போமாக

    அது சரி அது யாருங்க ரித்தீஸ் என்பவர் ?

    சில காலங்களுக்கு முன் நமதூர் பள்ளி, கல்லூரிக்கு சென்று சொன்ன வாக்குறுதிபடி அள்ளி அள்ளி கொடுத்தாரே அவரா ? சாரிங்க உங்களுடைய நம்பிக்கைக்கும் ஒரு எல்லை இல்லையா ?

    தொடரக்கூடும்

    ReplyDelete
  2. மிக அருமையான பின்னூட்டம் ! உஙகள் கருத்தில் அனுபவமும்,பிரச்சனைகளை அலசி ஆராய்வதில் ஆழ்ந்த முதிர்ச்சியும் பளிச்சிடுகிறது. தொடரக்கூடும்.. என்று நீங்கள் எழுதியிருப்பதால் உஙகள் கருத்துக்களை ஆர்வத்துடன் எதிர்பார்க்கிறோம். உங்கள் பதிவுக்கு மனமார்ந்த நன்றி !

    ReplyDelete
  3. மங்காத்தவின் தங்கச்சி மகன்October 30, 2011 at 10:18 PM

    சில காலங்களுக்கு முன் அகலப் பாதையாக மற்றும் நோக்கத்தில் ராமேஸ்வரம் - கோயமுத்துர் ரயில் போக்குவரத்தை நிறுத்தினார்கள்

    இன்று அதன் நிலைமை என்ன? ஏற்கனவே அமைக்கப்பட்ட பாதையில் மீட்டர் கேஜீயிலிருந்து பிராடு கேஜாக மாற்றுவதற்கு சில கோடிகளை ஒதுக்க ம்னமில்லாமலோ அல்லது வக்கில்லாமலோ( ? ) பல கோடி வருமானத்தையும் இழந்து நிற்கிறது

    அதன் திட்ட மதிப்பு இப்போது பல மடங்கு உயர்ந்துனவிட்டது

    அது மட்டும் அல்ல லட்சக்கணக்கான கேரள மக்களும் மேற்கு தமிழக மக்களும் தென் தமிழகம் வர முடியாமலும், தென் தமிழக மக்கள்
    வைத்தியத்தை முன்னிட்டு சென்னை போல முன்னிலையில் இருக்கும் கோயமுத்தூர்க்கு போக முடியாமலும், தென்கோடி மீனவர்கள் கேரள செல்ல முடியாமலும் அவதி படுவது ஆட்சியாளர்களுக்கு புரியுமா ?

    திட்டத்தை நிறைவேற்றுவதில் உண்டாகும் சுணக்கத்தால் பல்லாயிரக் கோடிக்கணக்கான மக்களின் வரிப்பணம்
    வீணாவது அரசுக்கு புரியாமலா இருக்கும்?


    ஆகவே காரைக்குடி - கன்யாக்குமரி ( வழி கீழக்கரை ) ரயில்வே வழித்தடம் கானல் நீர் போன்றதே நிலத்தை கையப்ப்டுத்த வேண்டும் அதனால் ஏற்படக்கூடிய வ்ழக்குகளை சந்திக்க
    வேண்டும் நீண்ட பாதை பெரிய பாலங்கள் அமைக்க வேண்டும் அப்பப்பா

    ஒரு வேளை அரசியல்வாதிகளும் மக்கள் பிரதிநிதிகளும் மனது வைத்தால் ஒரு வேளை துரிதமாக முடியலாம்

    நடக்குமா ? நடக்கத்தான் விடுவார்களா? நல்லதையே நினைப்போம்

    தொடரக்கூடும் !!!

    ReplyDelete
  4. Kilakarai consumer Right protection was established also the the wrights of human and many other wrights of ours exposed to the public by Janab.P.S.S.Seyad Mohamed (Chinna Maraikar)East Street.

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.