Wednesday, November 30, 2011

சிமெண்ட் சாலை அமைக்கும் பணி! நகராட்சி தலைவர் பார்வையிட்டார்!






முந்தைய‌ நகராட்சி நிர்வாகத்தால் அனுமதியளிக்கப்பட்டு தொடங்கப்பட்ட‌ ஓடக்கரை பள்ளி முதல் பெட்ரோல் பங்க் வரை சிமெண்ட் சாலை அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இப்பணியை கீழக்கரை நகராட்சி தலைவர் ராபியத்துல் காதரியா பார்வையிட்டார். அவருடன் 12வது வார்டு கவுன்சிலர் சித்தீக் ,லெப்பை தம்பி (முஸ்லீம் லீக் ) உள்ளிட்டோர் உடன் சென்றனர்.

1 comment:

  1. மங்காத்தவின் தங்கச்சி மகன்November 30, 2011 at 8:38 PM

    முன்னால் நிர்வாகத்தால் அனுமதிக்கப்ப்ட்ட திட்டம் என்பதால் ஒப்பந்த்தாரர்க்கு அப்போது மறைமுக செலவுகள் ஏற்பட்டிருக்கலாம்.

    அந்த பணி இப்போதைய நிர்வாகத்தின் கீழ் நடைபெறுவதால் ஒப்பந்ததாரர்க்கு கூடுதலான செலவு ஏற்பட்டிருக்க வாய்ப்புண்டு. இதன் காரணமாக சாலையின் தரம் குறைய வாய்ப்பு உண்டு. இப்போது பார்வை இட்டது போல் பணி முடியும் வரை அடிக்கடி பார்வை இட்டு ஒப்பந்தத்தில் சொன்ன தரத்ததில் சாலை சிறப்பாக அமையுமானால் நிச்சயமாக பொது மக்களின் பாராட்டும் வாழ்த்தும் உண்டு.

    தலைவி அவர்களின் முயற்சியால் மின் இணைப்பு கட்டணம் கட்டுவதில் பொது மக்களின் இன்னல்களை குறைக்கும் முகமாக புதிய பஸ் நிலையத்தில் பணம் செலுத்துவதற்கு இடம் ஒதுக்கி கொடுக்க இருப்பதாக ஊடகங்களில் தகவல் கசிந்துள்ளது. அன்னவரின் முயற்சிக்கு மனமுவந்த பாராட்டுகள்.

    மேலும் கோர்ட் தடையால் வேலை தடை பட்ட, வள்ளல் சீதக்காதி சாலையில் லிட்டரரி கிளப்-க்கு முன்னால் உள்ள ஹைமாஸ்ட் விளக்கை ஊரின் நடுநாயகமாக இருக்கும் முஸ்லீம் பஜாரில் நீர்மாலை கிணற்றுக்கு அருகில் அமைக்க முயற்சி எடுத்தால் பாராட்டுக்குரியவர் ஆவார் என்பதில் சந்தேகம் இல்லை.

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.