Tuesday, August 13, 2013

கீழக்கரையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்!கடும் எதிர்ப்பு! அரசு அதிகாரிகளுடன் வாக்கு வாதம்!




கீழக்கரையில் அரசு உத்தரவின் பேரில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகள் நடைபெற்றது.

கீழக்கரையில் போலீஸ் டி.எஸ்.பி அலுவலகம் முதல் வள்ளல் சீதக்காதி சாலை வரையிலான பகுதி முழுவது சாலையின் இருபுறங்களிலும் அமைக்கப்பட்டிருந்த படிகட்டுகள்,மேற்கூரைகள்,சிறிய பெட்டிகடைகள் ,விளம்பர போர்டுகள் ,கொடி கம்பங்கள் உள்ளிட்டவை ஜேசிபி உதவியுடன் அகற்றப்பட்டன. தாசில்தார் கதிரேசன்,தேசிய நெடுஞ்சாலை உதவி கோட்ட பொறியாளர் வேல்ராஜ்,நகராட்சி கமிஷனர் அயூப்கான் ஆகியோரது மேற்பார்வையில் இப்பணிகள் நடைபெற்றது.

கீழக்கரை வள்ளல் சீதக்காதி சாலையில் ஒரு பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் போது பாரபட்சமாக அகற்றும் பணிகள் நடைபெறுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி எதிர்ப்பு தெரிவித்ததால் அப்பகுதியில் அகற்றும் பணிகள் நிறுத்தப்பட்டது.

சிறிது நேரம் க்குவரத்தும் பாதிக்கப்ப்பட்டது.இதனையடுத்து அரசு அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் தங்கள்து எதிர்ப்புகளை எடுத்து கூறினர்.

இது குறித்து கீழக்கரை முஜீப் உள்ளிட்ட அப்பகுதியை சேர்ந்தவர்கள் கூறியதாவது, ஆக்கிமிப்புகளை அகற்றும் போது பாரபட்சமின்றி அகற்றப்பட வேண்டும் ஆனால் ஒரு சில இடங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் உள்ளன.ஆனால் கீழக்கரை முக்கிய சாலையில் உள்ள கடைகளை,இடங்களையும் மட்டும் ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற பெயரில் இடிக்கிறார்கள்.இது இப்பகுதி மக்கள் பெரும் வேதனைப்படுத்துகிறது.அரசு அதிகாரிகள் நேர்மையாக நடக்க வேண்டும்.இது குறித்து வழக்கு தொடர உள்ளோம்.பாரபட்சமான நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறோம்.என்றார்
கீழக்கரை இன்ஸ்பெக்டர் கனேசன் தலைமையில் போலீசார் பாதுக்காப்பு பணியில் ஈடுபட்டனர்.

3 comments:

  1. Thanks for kilakarai police & nagaradchi staff, mukiyamana step etuthu irukirir unkalukku Romba Thanks, Ethu podru Akiramippu Eppoluthum kilakarail erapadathavaru parthukkolum pati kilakarai Makkalin sarpaka keddu kolkiren, madrum kilakarail ulla market pakuthil mukkima akiramippu pakuthikalai appuram padutha pada venum , and, kilakarai main (vallzhal sithakathir) roadil ulla akiramippukalaium akadri ,main rode kuriya pathaiyaka irupathal, roadinai viriu padutha venum, thevai pattal pvt etathai govrnment kaiyakam patutha venum, ethu podra nadavatikaikalal, vipathukalai thavirka mudium,

    ReplyDelete
  2. கீழக்கரையின் சில முக்கிய வீதிகளில் வைத்தியத்தை முன்னிட்டு அவசர தேவைக்கு ஆட்டோவில் கூட செல்ல முடியாத அளவுக்கு படிக்கட்டுகள். படிக்கட்டுகள் மனிதர்கள் ஏறி இறக்கத்தான். யானைகள் ஏறி இறகக அல்ல.புது வரிகள் விதிக்கும் போதே இத கட்டுபாட்டிற்குள் கொண்டுவரலாம.நகராட்சி நிர்வாகம் நினைத்தால்.ஆனால் இன்றைய நக்ராட்சி நிர்வாகம் ம்ம்ம்.....

    ReplyDelete
  3. MLA கீழக்கரைஇல் ஆய்உ செய்யம் பொது எல்லாம் அது செய்வேன் இது செய்வேன் என்று சொல்வது வெறும் வாய் சாவட மட்டும் தான் அனால் ஒன்னும் நல்லது நடக்காது மக்களுக்கு ,

    1,மக்கள் வசிக்ககுடிய பகுதில் குப்பைகள் கொட்டபடுகிறது இது காலம் காலமாக நடக்கிறது,இதனால் பல நோய்கள் பரவுகிறது, இதற்க்கு ஏரியா MLA என்ற விதத்தில் வேறு வழி கண்டரா , நம்ம MLA?
    2,கீழக்கரை இல் தனி தாலுக்க அக்கபோறேன் சொன்னார் , இப்ப தனி தாலுக்க ஆபீஸ் என்ன ஆச்சு ?
    3,கீழகரைல் அணைத்து பகுதியும் குறிகிய பாதையாக இருக்கின்றது ,வாகனம் செல்லுவதற்கு மிக அதிகமான இடையுறு ஏற்படுகிறது, இதற்க்கு ஏதும் தீர்வு கண்டரா நாம் MLA ?
    4,கீழகரைல் சுற்று பரப்பு பெரிதாகி விட்டது (ஊரு பெரிதாகி விட்டது , மக்கள் தொகையும் அதிகமாகி விட்டது ) மக்கள் முக்கியமான பகுதிக்கு சென்று வர,மார்க்கெட் ,மீன் மார்க்கெட், போலீஸ் ஸ்டேஷன் , பேங்க் ,போஸ்ட் ஆபீஸ் , HOSPITAL,கடல்கரை ,ஸ்கூல்,காலேஜ் ,மசூதி,கோவில் ,சர்ச் ,ஆகிய பகுதிக்கு செல்ல,மினி பஸ் உண்ட ?அதற்கும் ஏதும் வழி கண்டரா MLA?
    5,கீழகரைல் டிகிரி படித்த பெண்கள் அதிகம் ,படித்த பெண்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்த ஏதும் நடவடிக்கை எடுத்தாரா MLA? ஒரு டீச்சர் ட்ரைனிங் காலேஜ் ஓபன் செய்வதற்கு குரல் கொடுத்தாரா நமது MLA?
    6,நமது ஊரில் உள்ள இளைய தலை முறைனர் எத்தனை நபருக்கு தொழில் வாய்ப்பு உதவி செயதார்?, அரசிடம் இருந்து தொழில் வாய்ப்பு பெட்று கொடுத்தாரா MLA?
    7,கீழகரைல் தொழ்லில் வளர்ச்சிக்கு என்ன நடவடிக்கை எடுத்தார் ? என்ன சாதித்தார் MLA?
    ஆயுஉ செய்கிறேன் ஆயு உ செய்கிறேன் என்று ஏன் வீண் பந்தா? நமது MLA க்கு ,ஏதும் சாதிக்க போவதில்லை என்பது மட்டும் நல்லா புரிகிறது கீழக்கரை மக்களுக்கும் , அவருக்கும் ,

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.