Monday, August 26, 2013

கீழக்கரையில் அதிகரித்து வரும் வெறிநாய் தொல்லை


 
 
கீழக்கரையில் நாளுக்கு நாள் நாய் தொல்லை அதிகரித்து வருகிறது. தெருக்களில் நாய்கள் கூட்டமாக சுற்றுவதும், டூவீலரில் செல்பவர்களை விரட்டுவதும் தினமும் நடக்கிறது. வள்ளல் சீதக்காதி சாலையிலும், அதையொட்டியுள்ள தெருக்களிலும், விஏஓ அலுவலகம், புதிய, பழைய பஸ்ஸ்டாண்டு மற்றும் சின்னகடை தெருவிலும் வெறிநாய் தொல்லை அதிகமாக உள்ளது. சாலையின் குறுக்கே நாய்கள் ஓடித்திரிவதால் டூவீலரில் செல்பவர்கள் கீழே விழுந்து காயமடைகின்றனர்.
 
பள்ளிக்குச் செல்லும் மாணவ, மாணவிகள் நாய்களுக்கு பயந்து நடந்து செல்ல அச்சப்படுகின்றனர். அதிகாலையில் வாக்கிங் செல்லும் முதியவர்களையும் நாய்கள் துரத்தும் சம்பவம் நடக்கிறது.
 
இதுகுறித்து 5வது வார்டு கவுன்சிலர் சாகுல் ஹமீது கூறுகையில்,
 
‘கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் நகராட்சி நிர்வாகம், நகரில் சுற்றித்திரியும் 100 நாய்களுக்கு கருத்தடை செய்தது. இருந்தபோதும் தற்போது நாய்கள் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. மக்கள் நலனை கருத்தில் கொண்டு நகரில் சுற்றிதிரியும் வெறி நாய்களை கட்டுபடுத்த நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

3 comments:

  1. Ward 5il makkal vasika kudiya pakuthil kuppaikidankku (kuppai sekarikkum vakanam) vaithu ullanar ithanal antha pakuthil thurnadramum kirimikalum parvikondu irukirathu ,ethu padi eyellam antha pakuthi ward memper sahul hameed kavalai paduvathu illai,antha pakuthi makkalukku siru kuzhanthaikal ulpada pala noi paravi varukirathu,ethu pala varudankalaka irunthu vaukirathu,pala varudankalaka nagaradchin mulam antha pakuthil kollakadu endru alaika pattu varukirathu, ether kku oru madru vazhi earpadutha thakuthillathavarkal ellam,
    Roadil sudri thirium naikalai(Dog) padri pesa kudathu,

    ReplyDelete
  2. MLA கீழக்கரைஇல் ஆய்உ செய்யம் பொது எல்லாம் அது செய்வேன் இது செய்வேன் என்று சொல்வது வெறும் வாய் சாவட மட்டும் தான் அனால் ஒன்னும் நல்லது நடக்காது மக்களுக்கு ,

    1,மக்கள் வசிக்ககுடிய பகுதில் குப்பைகள் கொட்டபடுகிறது இது காலம் காலமாக நடக்கிறது,இதனால் பல நோய்கள் பரவுகிறது, இதற்க்கு ஏரியா MLA என்ற விதத்தில் வேறு வழி கண்டரா , நம்ம MLA?
    2,கீழக்கரை இல் தனி தாலுக்க அக்கபோறேன் சொன்னார் , இப்ப தனி தாலுக்க ஆபீஸ் என்ன ஆச்சு ?
    3,கீழகரைல் அணைத்து பகுதியும் குறிகிய பாதையாக இருக்கின்றது ,வாகனம் செல்லுவதற்கு மிக அதிகமான இடையுறு ஏற்படுகிறது, இதற்க்கு ஏதும் தீர்வு கண்டரா நாம் MLA ?
    4,கீழகரைல் சுற்று பரப்பு பெரிதாகி விட்டது (ஊரு பெரிதாகி விட்டது , மக்கள் தொகையும் அதிகமாகி விட்டது ) மக்கள் முக்கியமான பகுதிக்கு சென்று வர,மார்க்கெட் ,மீன் மார்க்கெட், போலீஸ் ஸ்டேஷன் , பேங்க் ,போஸ்ட் ஆபீஸ் , HOSPITAL,கடல்கரை ,ஸ்கூல்,காலேஜ் ,மசூதி,கோவில் ,சர்ச் ,ஆகிய பகுதிக்கு செல்ல,மினி பஸ் உண்ட ?அதற்கும் ஏதும் வழி கண்டரா MLA?
    5,கீழகரைல் டிகிரி படித்த பெண்கள் அதிகம் ,படித்த பெண்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்த ஏதும் நடவடிக்கை எடுத்தாரா MLA? ஒரு டீச்சர் ட்ரைனிங் காலேஜ் ஓபன் செய்வதற்கு குரல் கொடுத்தாரா நமது MLA?
    6,நமது ஊரில் உள்ள இளைய தலை முறைனர் எத்தனை நபருக்கு தொழில் வாய்ப்பு உதவி செயதார்?, அரசிடம் இருந்து தொழில் வாய்ப்பு பெட்று கொடுத்தாரா MLA?
    7,கீழகரைல் தொழ்லில் வளர்ச்சிக்கு என்ன நடவடிக்கை எடுத்தார் ? என்ன சாதித்தார் MLA?
    ஆயுஉ செய்கிறேன் ஆயு உ செய்கிறேன் என்று ஏன் வீண் பந்தா? நமது MLA க்கு ,ஏதும் சாதிக்க போவதில்லை என்பது மட்டும் நல்லா புரிகிறது கீழக்கரை மக்களுக்கும் , அவருக்கும் ,

    ReplyDelete
  3. 5 வது வார்டில் குப்பைகள் மக்கள் குடி இருப்பு பகுதிகளில் கொட்ட படுகிறது , இதனால் பல தோற்று நோய்க்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரைம பல நோய்க்கு அளக்கி வருகின்றார்கள் இது காலம் காலமாக நடந்து வருகிறது , இதற்க்கு மாற்று வழி காண முடியாத 5 வது வார்டு கவுன்சிலர் சாகுல் ஹமீத் , ரோட்டில் சுற்றிதிரிம நாய்கள் பற்றி பேச கூடாது,அதற்கான தகுதி அவருக்கு இல்லை ,

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.