Thursday, August 29, 2013

தரமற்ற சிமெண்ட் சாலையால் விபத்து அபாயம்!நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

 
கீழக்கரை கிழக்கு தெருவில் 4 மாதங்களுக்கு முன்னர் புதிதாக போடப்பட்ட சிமென்ட் சாலை சேதமடைந்து விட்டது. சாலையை முறையாக ஆய்வு செய்யாமல் ஒப்பந்ததாரருக்கு பணம் வழங்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கீழக்கரை கிழக்கு தெருவில் 4 மாதங்களுக்கு முன்னர் நகராட்சி பொதுநிதியில் இருந்து ரூ.6 லட்சம் செலவில் சிமென்ட் சாலை போடப்பட்டது. ஒரு வாரத்திற்கு முன்னர் இந்த சாலையில் மினி வேன் சென்ற போது ஒரு இடத்தில் சாலை உடைந்து பள்ளம் ஏற்பட்டது. அந்த பள்ளத்தில் வேனின் பின் சக்கரம் சிக்கி கொண்டது. பின்னர் பொதுமக்கள் வேனை பள்ளத்தில் இருந்து தூக்கி அனுப்பி வைத்தனர்.
 
இந்த சாலை அமைக்கும் பணிகள் நடந்து வந்த போதே தரமற்ற வகையில் சாலை அமைக்கப்படுவதாக கிழக்கு தெரு பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். மேலும் சாலையை முறையாக ஆய்வு செய்து, அதன் பின்னரே, ஒப்பந்ததாரருக்கு பணம் கொடுக்க வேண்டும் என நகராட்சி அதிகாரிகளிடம் பொதுமக்கள் வலியுறுத்தினர். இருப்பினும் சாலையை ஆய்வு செய்யாமல், ஒப்பந்ததாரருக்கு பணம் வழங்கப்பட்டது என கூறப்படுகிறது.
இது குறித்து நகர் காங்கிரஸ் தலைவர் ஹமீதுகான் கூறுகையில், �4 மாதங்களுக்கு முன் இந்த சாலை உட்பட கீழக்கரையில் பல இடங்களில் சாலை அமைக்கும் பணி நடந்தது. இந்த பணிகள் அனைத்தும் ஒரே ஒப்பந்ததாரரிடம் கொடுக்கப்பட்டிருந்தன.
 
தரமற்ற முறையில் பணி நடந்து வருவதாக நகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தோம். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் சாலை பணிகளின் தரத்தை முறை யாக ஆய்வு செய்யாமல் ஒப்பந்ததாரருக்கு பணம் வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து கலெக்டர் விசாரித்து, தவறு செய்துள்ள அதிகாரிகள் மற்றும் தரமற்ற முறையில் சாலை அமைத்த ஒப்பந்ததாரர் ஆகியோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்� என்றார்.
 
தரமற்று அமைக்கப்பட்ட சிமென்ட் சாலை சேதம்

1 comment:

  1. கீழகரைல் மெயின் ரோடு மிக குறிகிய பாதையாக இருப்பதால் ,முக்கு ரோட்டில் இருந்து பைத்துல்மால் வழியாக கடல்கரை வரைம ரோடினை விரிவு படுத்த வேண்டும், இப்பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றுவதோடு ,மெயின் ரோட்டில் வாகனம் செல்வதற்கு இடையுறாக இருக்கும் பிரவைட் பில்டிங் வீடு , வெட்று இடத்தினை நகராட்சி கையகம் படுத்தி , முக்கு ரோட்டில் இருத்து கடல் கரை வரையும் உள்ள பாதை இருவழி பாதையாக மற்ற வேண்ட்டும் ,மற்றும் மெயின் ரோட்டில் இருந்து முஸ்லிம் பஜ்சர் வழியாக அப்பா பள்ளி மற்றும் க்ஹைரதுள் ஜலாலிய ஸ்கூல் வரைம பாதைகளை விரிவு படுத்த வேண்டும் , மெயின் ரோடில் இருத்து புதிய பஸ் ஸ்டாண்ட் செல்லும் பாதை மிக குறிகிய பாதையாக இருப்பதால் அப்பகுதில் உள்ள பில்டிங் அரசு கையகம் படுத்துவதை தவிர வேறு வழி இல்லை ,
    கீழகரைல் முக்கிய பாதைகளை விரிவு படுத்துவதோடு , பள்ளி , கல்லுரி , போலீஸ் ஸ்டேஷன் , அரசு மருத்துவமனை , டெலிபோன் ஆபீஸ் , மசூதி , கோவில் , சர்ச்சு, கடல்கரை , மீன் மார்க்கெட், மற்றும் அருகில் உள்ள கிராம மக்கள் வந்து செல்வதற்கு வசதியாகவும் மினி பஸ் அதிகம் அளவில் இயக்க வேண்டும் , மற்றும் 500 பிளாட் , புது கிழக்கு தெரு , மீனாட்சி புறம் , பழைய குத்பபள்ளி , புதிய பேருந்து நிலையம் , பழைய பேருந்து நிலையம் ஆக்கிபகுதிகளை மினி பஸ் செல்லும் பாதையாக மாற்றி தர வேண்டும் ,இந்து பஜ்சர் மிக குறிகிய பாதையாக இருபதாலும் , பல வருடம் கடந்த பில்டிங்கும் மக இருப்பதால் , மார்கெட்டை அப்பகுதில் இருந்து வேறு ஓரு பகுதிக்கு மற்ற வேண்டும் ,

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.