Sunday, June 23, 2013

கீழக்கரை நகராட்சியில் "மெகா ஊழல்" என குற்றச்சாட்டு! போராட்டம் நடத்த ஆலோசனை (25-06-13 செவ்)கவுன்சிலர் அழைப்பு!

கீழக்கரை நகராட்சியை கண்டித்து போராட்டம் நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் ஏற்கெனவே நடைபெற்றது.அதன் தொடர்ச்சியாக மீண்டும் ஆலோசனை கூட்டம் வரும் 25 ஜீன் செவ்வாய் கிழமை மாலை 4.30 மணியளவில் வள்ளல் சீதக்காதி சாலை ஐசிஐசிஐ வங்கி ஏடிஎம் இயங்கும் காம்ப்ளக்ஸ் முதல் மாடியில் நடைபெற உள்ளதால் அனைவரையும் கலந்து கொள்ள கவுன்சிலர் முகைதீன் இப்ராகிம் அழைப்பு விடுத்துள்ளார்

6 comments:

 1. ஊழல் ஒன்றும் அரசியலுக்கு புதிதல்ல , உங்களை போன்று உள்ளவர்களும் குறையல்ல.

  உங்களை பார்க்கும் பொழுது திரு .ராமதாஸ் தான் நினைவுக்கு வருகின்றார்

  ReplyDelete
 2. இந்த முகைதீன் இப்ராஹிம் அவர்களே ஊழலில் பெருத்துகொண்டு இருக்கும் ஒரு நபர் இவர் ஊளைளை பற்றி பேசுவது தான் வேடிக்கையாக இருக்கிறது .

  சரி மாதம் மாதம் யாரு இவருக்கு கூட்டம் போடவதர்க்கு அதற்க்கு ஆகும் செலவுகள் எல்லாம் கொடுப்பது யார் என்று யோசித்திர்களா .

  இவர் செய்த ஊழலை பல முறை மக்கள் நல பாதுகாப்பிற்கு பாதிக்க பட்டவர்கள் பல முறை சொல்லி இருகிறார்கள்

  அவர்கள் இந்நேரம் அந்த கழகத்தில் இருந்து எப்போதே நீங்கி இருக்க வேண்டும் . இவரை பற்றி நன்கு அறிந்தவர்களுக்கு தெரியும் .வரி வரி என்று மக்கள் பணத்தை வாரி கொண்டு இருப்பவர் ஊழல் என்று கூடம் போட்டால் சுத்த பிக்காளி தனமாக இல்லை

  இவருக்கு கூஜா தூக்குபவர்களை பார்க்கையில் கோபம் தான் வருகிறது
  இவர்களுடைய அறியாமை

  சும்மா செய்தியில் வருவதை எல்லா ஒரே நம்புவதற்கு மக்கள் முட்டாள் இல்லை . இவரை இல்லை என்று சொல்ல சொல்லுங்க பார்க்கலாம் ..இதற்க்கு கண்டிப்பாக மக்கள் நல பாதுக்கப்பு கழகம் பதில் சொல்லி ஆகவேண்டும் .

  ReplyDelete
 3. இவளவு காசு செலவு செய்து கூட்டம் போடுகிறார் கொடி பிடிக்கிறார் போஸ்டர் அடிக்கிறார் தொடர்ந்து இவர் என்ன அவளவு பெரிய செல்வந்தரா ? இவர்க்கு எங்கு இருந்து பணம் வருகிறது என்று மக்கள் நல பாதுகாப்பு கழகதிடமும் கேட்டதிற்கு நாங்கள் பத்து பைசா கூட கொடுத்தது இல்லை என்று சொல்லுகின்றார்கள் . அப்ப இப்படி இவளவு காசு . அதை எல்லாம் யோசிக்க நமக்கு தோணாது . சும்மா ஒரு செய்தி வந்தால் பேருக்கு ஒரு லைக் ஏதாவது கமெண்ட் அப்பறம் சீலா மீன் ஒரு கிலோ 550 ருபாய் என்று ஒரு செய்தி வந்த உடன் அதற்கும் கமெண்ட் போடா தொடக்கி விடுகிறோம் ,

  ReplyDelete
 4. முகைதீன் இபுராஹீமுக்கு எதிராக இங்கு விமர்சனம் செய்யும் அனைவரும் வெளிநாடுகளில் சொகுசாக இருந்து கொண்டு கீழக்கரையில் நடைபெறும் அவலங்கள் தெரியாமல் யாருக்கோ ஆதரவாக இங்கு பதிவிடுகிறார்கள் இதில் யாரேனும் கீழக்கரை நலனுக்காக ஒரு துரும்பை கூட அசைக்காத சுயநலவாதிகள், ஊர் நலனுக்காக ஒருவர் எந்த பிரதிபலனும் இல்லாமல் போராடினால் அவரை குறை சொல்வதற்காக மட்டும் வரிந்து கொண்டு வருகிறார்கள். இங்கு அவரை குறை சொல்லும் ஒருவரும் அவர் யார் மீது குற்றம் சொல்கிறாரோ அவர்களிடம் உண்மை நிலவரத்தை கேட்டு அவர்கள் மீது எந்த குற்றமும் இல்லை என்று நிருபிக்கட்டுமே.

  ReplyDelete
  Replies
  1. இதத் தாங்க நானும் கேட்டேன், சகோதரர் முகைதீன் இபுராஹிமுடன் அவருக்கு என்ன காழ்ப்புணர்ச்சியோ தெரியலே ஒரு சகோதரர் அரைத்த மாவையே அரைக்கிற மாதிரி அவரு இப்படிப் பட்டவர் / அப்படிப் பட்டவர், அவரோட பேசிப் பார்த்தா உங்களுக்கு விளங்கும் என்று எழுதுறாரே தவிர.......

   கீழக்கரை நகராட்சி நிர்வாகத்திலே "ல"கரத்திலே போட்டுத் தாக்குறாங்களே அப்படி கொள்ளை அடித்துக்கொண்டிருபவர்களைப் பற்றி ...... எனத் திரும்பத் திரும்பக் கேட்டும்.....

   புரியலை சார் புரியுறமாதிரி சொல்லுங்கனு கேட்கிறார். அதோடு ......

   இந்த கீழக்கரை டைம்ஸ்-ல வரும் செய்திகள் எல்லாம் அனைத்தும் உண்மைகளாக வருவது இல்லை சில நேரங்களில் அவர்கள் அனுப்பும் செய்தி தவறாக கூட இருக்கலாம் நாம் அப்படியே நம்புவது அருத்தமற்றது என்று எழுதுகிறார். கடைசி வரைக்கும் நான் கேட்டதுக்கு பதில் எழுதவே இல்லை போங்க..... keelakarai Times FB-ல அந்த chatting-அ பார்க்கலாம்.

   இது பற்றிக் கீழக்கரை டைம்ஸ் என்ன சொல்லப் போகிறது..... சும்மா கிடைக்கிற செய்திகளை அப்படியே cut paste பண்ணி publish பண்ணிடுவாங்கலோ? மேற்படி chatting-a அவங்களும் பார்த்து தானே இருப்பாங்க.

   Delete
 5. இதில் கவுன்சிலர் முஹைதீன் தந்திருக்கும் அறிக்கையைத்தான் வெளியிட்டுள்ளோம்.அவர் கூறியிருக்கும் குற்ற்ச்சாட்டுக்ள் உண்மை அல்லது பொய் என்று கீழக்கரைடைம்ஸ் சார்பாக எங்கும் சொல்லப்படவில்லை.அவர் குற்றச்சாட்டுகள் உண்மையா பொய்யா என்பதை சம்பந்தபட்டவர்கள் விரும்பினால் பதிலளிக்கலாம் கீழக்கரை டைம்சில் வெளியிட தயாரக உள்ளோம்.சேர்மன் தரப்பு மற்றும் எதிர்கட்சியினர் தரப்பு என்று இரு தரப்பு செய்திகளை ஏற்கெனவே பலமுறை வெளியிட்டுள்ளோம்.எனவே நிச்சயமாக செய்திகளை ஆராய்ந்து அறிந்து கொள்வது ஒவ்வொருவரின் உரிமையும் கடமையுமாகும்.கீழக்கரைடைம்ஸ்சில் நடைபெறும் நிகழ்வுகளைதான் செய்திகளாக தருகிறோம் இதில் பொய்யாக வெளியிட வேண்டிய அவசியமில்லை.உலகில் பல பாகங்களில் முத்துக்களக சிதறி கிடக்கும் நம் சொந்தங்கள் நமதூர் செய்திகளை அறிந்து கொள்ள வேண்டும் என்று நடத்தப்படும் இத்தளத்தில் தனிநபர் தாக்குதல்களை தவிர்த்து கொள்ளுங்கள்.பெரும்பாலான செய்திகளை நாம் நேரடியாக புகைப்படங்களை பெற்று வெளியிடுகிறோம் அப்படி இருக்கும் போது இதில் கட் காப்பி பேஸ்ட் செய்ய வேண்டிய தேவை ஏற்படவில்லை

  ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.