Thursday, June 6, 2013

வபாத் அறிவிப்பு (காலமானார்கள்) !

 
மறைவுக்கு(05-06-13) ஒருநாள் முன்பாக டெல்லியில் அமைச்சர் ரஹ்மான் கானை மர்ஹூம் ஹமீது அப்துல் காதர் அவர்கள் சந்தித்தபோது அருகில் அப்துல் ரஹ்மான்.எம்.பி
 
 
கீழக்கரையை சேர்ந்த சமுதாய புரவலரும் ,முஹம்மது சதக் அறக்கட்டளை நிறுவனரும்,முஹம்மது சதக் கல்வி நிறுவனங்களின் தலைவரும்,கீழக்கரை குத்பா கமிட்டி தலைவரும்,மேலத்தெருவை செர்ந்த மர்ஹூம் முஹம்மது சதக் தம்பி அவர்களின் மகனுமாகிய டாக்டர் அல்ஹாஜ்   எஸ்.எம்.ஹமீது அப்துல் காதர் அவர்கள் 06-06 - 2013 வியாழக்கிழமை  டெல்லியில் வபாத்தானார்கள் (காலமானார்கள்)

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
அன்னாரின் நல்லடக்கம் 08 -06- 2013 சனிக்கிழமை காலை 10 மணியளவில் சென்னை ராயப்பேட்டை மையவாடியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
.

இதன் விபரம் வருமாறு : அதிகமான சமுதாயக் கல்வி நிறுவனங்கள் இருந்தும் நம் சமுதாயத்திற்கென ஒரு மருத்துவக் கல்லூரி இல்லையே என்ற ஆதங்கத்தில் 200 படுக்கைகள் கொண்ட ஒரு மிகப்பெரிய மருத்துவமனையை ஏற்படுத்தியுள்ளார் அல்ஹாஜ் செ.மு. ஹமித் அப்துல் காதர். இம்மருத்துவமனையை திறந்து வைத்து சிறப்புரை ஆற்றுவதற்காக மத்திய சிறுபான்மை விவகாரங்களுக்கான அமைச்சர் திருமிகு கே. ரஹ்மான் கான் அவர்களை சந்திக்க தனது ஆழ்ந்த விருப்பத்தினை வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.அப்துல் ரஹ்மான் அவர்களிடம் கேட்டுக் கொண்டார். அதன்படி 05.06.2013 புதன்கிழமை சந்திப்பு நிகழ்வினை எம்.அப்துல் ரஹ்மான் எம்.பி.யின் ஏற்பாட்டில் மத்திய அமைச்சருடனான சந்திப்பும் சிறப்புடன் நடைபெற்றது.

 மருத்துவக்கல்லூரி துவங்குவதற்கு முன்னேற்பாடாக மருத்துவமனை ஏற்படுத்துவது குறித்து பெருமகிழ்வடைந்தார் அமைச்சர் ரஹ்மான் கான். மருத்துவமனை திறப்பு விழாழ்வில் தான் நிச்சயம் பங்கேற்கிறேன் என்ற உறுதியினையும் அமைச்சர் ரஹ்மான் கான் வழங்கினார். அதனைத் தொடர்ந்து அப்துல் ரஹ்மான் எம்.பியின் ஏற்பாட்டில் இந்திய துணை ஜனாதிபதி திருமிகு. ஹமீது அன்சாரியினை மரியாதை நிமித்தமாக அல்ஹாஜ். செ.மு. ஹமித் அப்துல் காதர் அவர்கள் சந்தித்தார். அப்போது சமுதாயத்திற்கென மருத்துவக் கல்லூரி துவங்கப்பட வேண்டும் என்ற தனது விருப்பத்தினை தெரிவித்தார். துணை ஜனாதிபதி அவர்களும் அதற்காக தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். மிகுந்த மகிழ்ச்சிப் பெருக்குடன் துணை ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்து விட்டு, இத்தகைய நிகழ்வுகளை ஏற்பாடு செய்த வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் எம். அப்துல் ரஹ்மானுக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார்

. அதனைத் தொடர்ந்து டெல்லியில் பிற அலுவல்களை முடித்து விட்டு 06.06.2013 வியாழன் மாலை சென்னை செல்வதற்காக ஆயத்தமாகிக் கொண்டிருக்கும் வேளையில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக டெல்லியில் உள்ள ராம் மனோகர் லோகியா மருத்துவமனைக்கு சென்றடைந்ததும் நெஞ்சுவலி அதிகமாகி உயிர் பிரிந்தது. அன்னாரது ஜனாஸா சென்னைக்கு கொண்டு வருவதற்கான பணியில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் எம். அப்துல் ரஹ்மான் ஈடுபட்டு வருகிறார். வியாழன் நள்ளிரவு அல்லது வெள்ளிக்கிழமை காலை சென்னை கொண்டு வரப்பட்டு நல்லடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அன்னாரது மறைவிற்காக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ் மாநிலத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன், வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் எம். அப்துல் ரஹ்மான், ஈமான் அமைப்பின் பொதுச்செயலாளர் குத்தாலம் அல்ஹாஜ் ஏ. லியாக்கத் அலி மற்றும் துணைப் பொதுச்செயலாளர் திருப்பனந்தாள் ஏ. முஹம்மது தாஹா உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
 

23 comments:

 1. May Allah SWT forgive his sins and bless him with Jannathul Firdous.

  An example for togetherness and Leadership quality.

  The service rendered by Hamid Kaaka and his family members to our Native cannot be forgotten.
  May Allah give the family strength to bear the loss. - Kaana Cheena Jaafar Badhusha, Abu Dhabi

  ReplyDelete
 2. மங்காத்தாவின் தங்கச்சி மகன்June 6, 2013 at 8:44 PM

  அஸ்ஸலாமு அலைக்கும். வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹூ

  இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன்.

  வார்த்தை எதுவுமே இல்லை கண்ணீரைத் தவிர.

  கீழக்கரை ஜும்மா கமிட்டியின் தலவரான இந்த மாமனிதரால் கல்விக்காக ஆற்றிய சேவையை புகழ் பாட யாம் கவிஞராக பிறக்க வில்லையே...

  உள்ளூரிலேயே குறைந்த செலவில் பொறியியல், தொழில் கல்வியல் பட்டம் பெற்று இன்று உலக அளவில் வியாபித்திருக்கும் கீழக்கரை வாழ் மாணவச் செல்வங்களை உருவாக்கிய பெருமையை சொல்ல தமிழில் வார்த்ததைகள் உண்டோ? தகுதி தான் உண்டோ?

  அன்னாரின் மஃபிரத்துக்கும், ஜன்னத் பிர்தவுஸில் நற்பதவி கிடைக்கவும்,கண்மணி செய்யதினா ரசூலே கரீம் ஸல்லாஹு அலைஹி வ ஸல்லத்தின் ஷபாத் கிடைக்கவும் நீராடும் கண்களோடும் விம்மும் நெஞ்சத்தோடும் இரு கரம் ஏந்தி ஏக இறைவனிடத்தில் இறைஞ்சுகின்றோம், மன்றாடுகிறோம்.

  அன்னாரை இழந்து ஆறா துயர் உற்றிருக்கும் அனைத்து தரபினக்கும் ஸப்ரன் ஜமீலா என்னும் அழகிய பொறுமையை வல்ல அல்லாஹு சுபுஹானவுத்தாலா அள்ளி வழங்க வழங்க உளம் உருக பிரார்த்திகின்றோம்..மன்றாடுகிறோம்.

  ReplyDelete
 3. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
  அன்னாரின் பாவங்களை மன்னித்து சுவனத்தில் அல்லாஹ் உயர்ந்த அந்தஸ்தை இவருக்கு வழங்குவானாக .

  ReplyDelete
 4. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியுன், யா அல்லாஹ் அன்னாரின் பாவங்களை மன்னித்து சுவனத்தில் உயர்ந்த அந்தஸ்த்தை வழங்குவானாக.......ஆமீன்

  ReplyDelete
 5. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியுன், யா அல்லாஹ் அன்னாரின் பாவங்களை மன்னித்து சுவனத்தில் உயர்ந்த அந்தஸ்த்தை வழங்குவானாக ஆமீன்........

  ReplyDelete
 6. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

  ReplyDelete

 7. inna lillahi wa inna ilai hi rajioon
  اللَّهُمَّ اغْفِرْ لِ وَارْفَعْ دَرَجَتَهُ فِي الْمَهْدِيِّينَ وَاخْلُفْهُ فِي عَقِبِهِ فِي الْغَابِرِينَ وَاغْفِرْ لَنَا وَلَهُ يَا رَبَّ الْعَالَمِينَ وَافْسَحْ لَهُ فِي قَبْرِهِ وَنَوِّرْ لَهُ فِيهِ
  இறைவா! இவரை மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக! - முஸ்லிம் 1528
  நாயன் அல்லாஹ்
  அன்னாரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தார்களுக்கும், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவர்களுக்கும் 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையை தந்தருள்வானாக ஆமீன்

  ReplyDelete
 8. inna lillahi wa inna ilai hi rajioon
  اللَّهُمَّ اغْفِرْ لِ وَارْفَعْ دَرَجَتَهُ فِي الْمَهْدِيِّينَ وَاخْلُفْهُ فِي عَقِبِهِ فِي الْغَابِرِينَ وَاغْفِرْ لَنَا وَلَهُ يَا رَبَّ الْعَالَمِينَ وَافْسَحْ لَهُ فِي قَبْرِهِ وَنَوِّرْ لَهُ فِيهِ
  இறைவா! இவரை மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக! - முஸ்லிம் 1528
  நாயன் அல்லாஹ்
  அன்னாரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தார்களுக்கும், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவர்களுக்கும் 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையை தந்தருள்வானாக ஆமீன்

  ReplyDelete
 9. may allah give him jannatul firdose ameen

  ReplyDelete
 10. may allah give him jannatul firdose , forgive his all sin ameeen.let us pray for his soul

  ReplyDelete
 11. இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன்.........

  ReplyDelete
 12. This comment has been removed by the author.

  ReplyDelete
 13. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

  ReplyDelete
 14. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

  ReplyDelete
 15. இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன்.........

  ReplyDelete
 16. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

  இறைவா! இவரை மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக! - முஸ்லிம் 1528

  ReplyDelete
 17. enna ellaihe va enna ellahe razaivoon.

  ReplyDelete
 18. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியுன், யா அல்லாஹ் அன்னாரின் பாவங்களை மன்னித்து சுவனத்தில் உயர்ந்த அந்தஸ்த்தை வழங்குவானாக ஆமீன்........

  ReplyDelete
 19. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியுன், யா அல்லாஹ் அன்னாரின் பாவங்களை மன்னித்து சுவனத்தில் உயர்ந்த அந்தஸ்த்தை வழங்குவானாக ஆமீன்........

  ReplyDelete
 20. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

  ReplyDelete
 21. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியுன், யா அல்லாஹ் அன்னாரின் பாவங்களை மன்னித்து சுவனத்தில் உயர்ந்த அந்தஸ்த்தை வழங்குவானாக ஆமீன்........

  ReplyDelete
 22. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியுன், யா அல்லாஹ் அன்னாரின் பாவங்களை மன்னித்து சுவனத்தில் உயர்ந்த அந்தஸ்த்தை வழங்குவானாக ஆமீன்........


  ReplyDelete
 23. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

  ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.