Sunday, June 9, 2013

கீழக்கரை பொது நிகழ்ச்சியில் நகராட்சி கமிஷனர்- சேர்மன் கணவர் மோதலால் பரபரப்பு! தொடரும் போஸ்டர் யுத்தம்!
நகராட்சி ஊழியர்களுடன் ஆலோசனை நடத்தும் கமிஷனர் முஹம்மது முஹைதீன்


கீழக்கரை மேலத்தெருவில்  மக்கள் நல இயக்கம் சார்பில் கல்வி உதவி வழங்கும் விழா நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் இலங்கை தூதரக துணை கமிஷனர்,கீழக்கரை நகராட்சி தலைவர் ராவியத்துல் காதரியா,துணை தலைவர் ஹாஜா முகைதீன்,கமிசனர் முகம்மது முகைதீன் மற்றும் உள்ளூர் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் நிகழ்வுக்கு வந்திருந்த கீழக்கரை சேர்மணின் கணவர் ரிஸ்வான் அங்கு இருந்த நகராட்சி கமிஷனர் முகம்மது முகைதீனிடம் நகராட்சி அலுவலகத்தில் கேமரா பொருத்தும் பணி என்னாயிற்று என்றார் அதற்கு பதிலளித்த கமிஷனர் அலுவலகத்தில் வைத்து கேட்க வேண்டிய கேள்வியை பொது நிகழ்ச்சியின் போது கேட்கலாமா? என்றார்.இதனை தொடர்ந்து இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டு கமிசனரை நோக்கி சத்தமிட்டார் சேர்மணின் கணவர் இதனால் நிகழ்ச்சிக்கு வந்திருந்த பலர் அதிர்ச்சியடைந்தனர்.

அன்று காலை ஊழியர்கள் பணிகளை புறக்கணித்ததால் வெறிச்சோடிய நகராட்சி அலுவலகம்
 
இது குறித்து நகராட்சி கமிஷனர், சேர்மணின் கணவர் ரிஸ்வானின் செயலை  சக அதிகாரிகளிடம் தெரிவித்ததை தொடர்ந்து 2 நாட்களக்கு முன் காலை 10.30 மணி வரை அலுவலக பணிகளை துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரும் பணிகளை புறக்கணித்தனர். கமிஷனர் அனைவரிடமும் ஆலோசனை செய்து மாலை 5 மணியளவில் ஆர்ப்பாட்டம் செய்யலாம் தற்போது பணியை செய்யுங்கள் என்று கேட்டு கொண்டதற்கிணங்க அனைவரும் பணிக்கு திரும்பினர்.கவுன்சிலர்களும் கமிஷனரை சந்தித்து ஆலோசனை செய்தனர்.இதனால் நகராட்சி அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது.

துணை சேர்மன் ஹாஜா முஹைதீன் மற்றும் கவுன்சிலர்கள் கமிஷனரை சந்தித்தனர்

அன்று சேர்மன் தரப்பில் கீழக்கரை காவல்நிலையத்தில் ,நகராட்சி கமிஷனர்,நகராட்சி துணை தலைவர் ,கவுன்சிலர்,பத்திரிக்கையாளர் உள்ளிட்ட சிலர் மீது புகாரளிக்கப்பட்டது

அன்று மாலை நகராட்சி தலைவரின் கணவர் ரிஸ்வானை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற இருந்த நிலையில் சேர்மன் தரப்பில், நடைபெற்ற சம்பவத்துக்கு கமிஷனரிடம் மன்னிப்பு  கோரப்பட்டதால் அன்று நடைபெற  இருந்த ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டதாக கமிஷனர் தெரிவித்தார்.

சேர்மன் தரப்பில் காவல்நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரும் வாபஸ் பெறப்பட்டது

.


சேர்மனி கணவர் ரிஸ்வானை கண்டித்து  நகரெங்கும் கம்ப்யூனிஸ்ட்,காங்கிரஸ்ட்,துணை சேர்மன் உள்ளிட்டோர் சார்பில் கண்டன போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.


இது குறித்து நகராட்சி தலைவரிடம் கேட்ட போது ,

இப்பிரச்சனை தீர்ந்து விட்டது . ஆனால் சிலர் வேண்டுமென்றே பெரிதாக்குகிறார்கள்.
என் கணவர் என்னுடன் வருவது சிலருக்கு பிடிக்கவில்லை இது பொன்ற பிரச்சனைகளை பெரிதுபடுத்தி நிர்வாகத்தை  சீர்குலைக்க முயல்கிறர்கள்  .துணை சேர்மன் ஹாஜா முஹைதீன் தூண்தலின் பேரில் இது நடைபெறுவதாக கருத வேண்டியுள்ளது.

11 comments:

 1. பிரச்சினை தீர்ந்துடுச்சின்னு சேர்மன் சொல்றாங்க.... அது எப்படீங்க
  பொது இடத்துல வாக்குவாதம் நடந்திருக்கு ஒரு கவுரவுமான பதவியில இருக்கிற கமிஷனர் இவ்வளவு சீக்கிரம் சாமாதானம் ஆனாரு..... எங்கேயோ ஒதைக்குதே! உள்குத்து எதுவும் இருக்குமோ? அண்ணே உங்களுக்கு தெரியுமா? அய்யா உங்களுக்குத் தெரியுமா?

  ReplyDelete
  Replies
  1. மங்காத்தாவின் தங்கச்சி மகன்June 10, 2013 at 6:31 PM

   கதவுகள் சாத்தப் பட்ட அறைக்குள் உப்பை தின்றவர் சம்பந்தப்பட்டவரின் காலில் விழுந்து மன்னிப்பு கோரி இருந்தால் மனம் இறங்கி இருக்கலாம் அல்லவா? இனி நடக்கப் போவதை தான் கவனிக்க வேண்டும்.

   Delete
  2. உள்குத்து இல்லாமல் இருக்குமா விரைவில் எதிர்பாருங்கள் கீழைமுரசு இனையதலத்ததை

   Delete
  3. காலில் விழுந்து, ........விழுந்து, ச்சே ச்சே கேவலப்பட்ட பொழப்பாவுல இருக்கு. செத்த பின்ன நமக்கு உதவாத இந்த பணத்துக்காக இப்படி ஒரு பொழப்பா தூ.....

   Delete
 2. மங்காத்தாவின் தங்கச்சி மகன்June 9, 2013 at 6:35 PM

  கத்தரிக்காய் முற்றினால் சந்தைக்கு வந்தே தீர வேண்டும் என்பது மூத்தவர்களால் சொல்லிய அனுபவ சொலவடை.

  உப்பை தின்றவன் தண்ணீரை குடித்தே ஆக வேண்டும். அது காலத்தின் கட்டாயம்.

  ஆட்டை கடித்து மாட்டை கடித்து மனிதனை கடித்த கதையாக நகராட்சி நிர்வாகம் போய் கொண்டிருக்கிறது.இதன் காரணமாக தற்சமயம் ஊரே நாறிக் கொண்டு இருக்கிறது.

  அரசு தரப்பே, எம் மக்களுக்கு உன் பதில் என்ன? கீழக்கரை உளவுத் துறை தூங்கிக்கொண்டுடிருக்கிறதா? மக்களின் வரிப் பண்ம் பாழாகிக் கொண்டிருக்கிறதே!!!

  தவறாக செயல்படும் மக்கள் பிரதிநிதிகளை திரும்பப் பெறும் அதிகாரம் எம் மக்களுக்கு இல்லாததால் கீழக்கரை நகர் பிரச்சனைக்கு முடிவு காண வேண்டியது சர்வ வல்லமை பொருந்திய தமிழக அரசின் தார்மீகக் கடமையாகும்.மக்கள் பொங்கி எழுந்து சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் முன் விரைந்து செயல் பட்டு நடவடிக்கை எடுக்க பொது மக்கள் பெரிதும் விரும்புகிறார்கள்.

  ReplyDelete
 3. மங்காத்தாவின் தங்கச்சி மகன்June 10, 2013 at 6:45 PM

  பிரச்சனை தீர்ந்து விடடது என்று சொல்வதன் மூலமே சம்பவம் நடந்தது உண்மை என்பது உறுதி செய்யப்படுகிறது.

  இது தேவையா? இது போல எத்தனை சம்பவங்கள். கல்லடி பட்டாலும் சொல்லடி படக்கூடாது என்பார்கள். ஊர் வாயில் எத்த வேண்டாம் என்பதே எங்களின் ஆத்ங்கம்.

  ReplyDelete
 4. மங்காத்தாவின் தங்கச்சி மகன்June 10, 2013 at 9:08 PM

  நன்றி: கீழை முரசு 09/06/13 keezhaimurasu.blogspot.in

  கீழக்கரையில் சுருட்டப்படும் கோடிகள் - சுகபோகத்தில் கொழிக்கும் மக்கள் பிரதிநிதிகள்…

  கீழக்கரை நகராட்சியில் முறைகேடுகளுக்கு எதிராக முகைதீன் இப்ராஹீமால் கடந்த மாதம் இறுதியில் கீழக்கரை அணைத்து மக்கள் இயக்கங்கள், கட்சிகள், ஜமா அத்துக்கள் என அணைவரையும் ஒன்று சேர்த்து ஒரு கூட்டம் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கீழக்கரை நகராட்சியின் 19 மாத கால சாதனை கீழக்கரை மக்களின் வேதனை என்ற புத்தகம் வெளியிடப்பட்டது அதில் இந்த நகர் நிர்வாகம் பொறுப்பேற்ற 19 மாத காலத்தில் 7 கோடியே 64 லட்சம் நிதியில் நடைபெற்ற திட்டப்பணிகள், அதை செய்த ஒப்பந்ததாரர்கள், அவர் செய்த பணிகள் குறித்து ஆய்வு, இதில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து ஆதாரத்துடன் விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது.. இந்த கூட்டத்தில் நடைபெற்ற விவாதத்தின் அடிப்படையில், நகராட்சி நிர்வாகத்துக்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடத்தவும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. கீழக்கரை நகராட்சியில் என்ன நடக்கிறது என்பதனை அறியும் போது நமக்கு ஆச்சரியம் மேலிட்டு குருதி கொதிக்கிறது...

  கீழக்கரை நகரின் வளர்ச்சி மற்றும் பொது திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் நகரசபையின் அதிகார தளத்தில் செயலாற்றும் சக்திகள் பாரிய அளவில் முறைகேடுகள் நடத்தியிருப்பதும் , நகரின் வளர்ச்சிப்பணிகளை கண் துடைப்பாக துவக்கி, 50 சதவீத வேலைகள் கூட முழுமை பெறாத நிலையில், பணிகளுக்கான மொத்த தொகையயும் காண்ட்ராக்டர்களுக்கு வழங்கி பின் அவர்களிடமே அந்த நிதியை வாங்கும் ஆழிய மோசடி வேலைகளில் ஈடுபடுவதாகவும், சுருட்டப்பட்ட மக்கள் நிதியை கூட்டாக பல பிரதிநிதிகள் பிரித்துக் கொண்டு சுகபோகத்தில் கொழிப்பதாகவும், கீழக்கரையின் வளர்ச்சி பணிகள் பாதி முடிவடைந்த நிலையில் அம்போவென… நிற்பதாகவும் அறிய முடிகிறது.

  கீழக்கரையில் திட்டப்பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதிகள் அனைத்தும் காண்ட்ராக்டர்களுக்கு செட்டில் செய்யப்பட்ட நிலையில், 50 சதவீத பணிகள் கூட நிறைவேறவில்லை, அப்படி நிறைவேறி இருப்பதாக ஆதாரத்துடன் தெரிவித்தால் என் நகர்மன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யத் தயார் என முகைதீன் இப்ராஹீம் வெட்ட வெளியில் சவால் விடுகிறார். இல்லாத வாயிலுக்கு கதவு போட்ட மோசடிப் பேர்வழிகள் இந்த சவாலை ஏற்க தயாரா? என கீழக்கரை மக்கள் கேட்கிறார்கள்.

  தொடரும்...

  ReplyDelete
 5. மங்காத்தாவின் தங்கச்சி மகன்June 10, 2013 at 9:13 PM

  யார் இந்த முகைதீன் இப்ராஹீம் ? கீழக்கரை நகர்மன்றத்துக்கு உட்பட்ட18 ஆவது வார்டு பகுதியிலிருந்து நகர்மன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு உறுப்பினர். இன்றைய இந்திய அரசியல் சூழலில் ஊழலுக்கு எதிரான நேர்மை மிகுந்த ஒரு தனி மனிதனின் குரலுக்கு என்ன மாதிரியான நெருக்கடிகள் கொடுக்கப்படும் என்பதை நாம் அறிவோம். அதை விட மேலான அழுத்தங்களும், அவதூறு பேச்சுக்களும், சட்ட நெருக்கடிகள், சஸ்பெண்ட் என கடந்த 19 மாதங்களாக இந்த நகர்மன்ற உறுப்பினருக்கு டார்ச்சர் கொடுக்கப்பட்டு வருவதை கீழக்கரை மக்கள் தெரிந்து வைத்துக் கொள்வது அவசியமாகிறது.

  கீழக்கரை நகர்மன்றத்தின் அதிகார மையத்தில் இயங்கும் ஆதிக்க சக்திகள் இழைக்கும் தவறுகளை இடித்துரைத்தும், தட்டிக் கேட்டும், பொதுதளத்தில் வெளிப்படுத்தியும் தன்னந்தனியாக பல போராட்டங்களை முகைதீன் இப்ராஹீம் தொடர்ந்து நடத்திய போதும் , கீழக்கரை மக்கள் மற்றும் அமைப்புசார்ந்த, அமைப்புசாரா இயக்கங்களின் ( ஒரு சில அமைப்புகள், ஜமா-அத்துக்கள் தவிர) அலட்சிய போக்காலும், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் கூட்டு களவாணித்தனத்தாலும், லஞ்ச, லாவண்யத்துக்கு எதிராக இவர் முண்ணகர்த்திய அத்தனை முயற்சிகளும் விழலுக்கு இறைத்த நீர் போல வீணாகிப்போனது.

  என்ன கொடுமை………… மக்கள் பிரதிநிதிகளாய் கீழக்கரை மக்களால் வலிந்து உருவாக்கப்பட்டவர்களின் வாயில்களில் மட்டும் ஊழல் எனும் சாக்கடை நீர் தறிகெட்டு பாய்ந்து, முழுதும் நிரம்பி, ததும்பி, மூக்கடைக்கும் வீச்சம் எடுத்து வருகிறது. எங்கே செல்லும் இந்த நரகல் நிறைந்த பாதை என கீழக்கரை சமுதாயம் மூக்கை மூடி முகம் சுழிக்கிறது.

  முகைதீன் இப்ராஹீமின் கூற்றுப்படி, உள்ளபடியே சொல்வோமெனில் , கீழக்கரைக்கு 2012 – 2013 ஆண்டில் தமிழக அரசினால் ஒதுக்கப்பட்ட 8 கோடிக்கான நிதியில், மக்கள் நல மற்றும் கட்டமைப்பு பணிகளுக்காக ஏராளமான டெண்டர்கள் விடப்படுகிறது, குறிப்பிட்ட காலத்தில் நிறைவடைய வேண்டிய பணிகள் தகுந்த காரணமில்லாமல் உள் நோக்கத்துடன் நீட்டிக்கப்படுகிறது, அல்லது அறை குறை வேலைகளுடன் வேலை சுத்தமாக நிறுத்தப்படுகிறது, முழுமை பெறாத வேலையை முடிவடைந்த வேலையாக நம்ப வைக்கப்படுகிறது, சில வேலைகள் துவக்கப்படுவதாக படம் காட்டப்பட்டு ஒரே நாளில் முடிவடைய வைக்கப்படுகிறது. பின் ஒப்பந்த்தாரர்களுக்கு முழுப்பணமும் கொடுக்கப்பட்டு , பின் அவர்களிடம் இருந்தே திரும்ப பெறப்பட்டு கோடிகளில் கொள்ளையடிக்கப்படுகிறது. இந்த உலகமகா மோசடி குறித்து வெளியிடப்பட்ட ஆதாரங்களை கீழே காணலாம்.

  கொள்ளையிட்ட பணத்தினை தேவைக்கேற்றவாறு பல் இளிக்கும் பல நகர் உறுப்பினர்களுக்கு எலும்பு துண்டுகளாய் வீசி எறியப்படுகிறது. ஆப்பத்தை பங்கு போட்ட பின்ந்தின்னி குரங்குகள் வாயை கட்டிக்கொண்டு அடுத்து எப்ப வரும் என பெருமாள் கோயில் வாயிலில் பிச்சை எடுக்கும் பாங்கோடு காத்துகொண்டிருக்க வேண்டியது.. காசு வாங்க மறுக்கும் யோக்கியவான் எவனாவது சிக்கினால் அவனை கிறுக்கன், பொழைக்க தெரியாதவன், என்ற வசவு மொழிகளால் அர்ச்சித்து விரட்ட வேண்டியது..

  தொடரும்...

  ReplyDelete
 6. மங்காத்தாவின் தங்கச்சி மகன்June 10, 2013 at 9:15 PM

  அறிவார்ந்த கீழக்கரை சமுதாயமே, அரசியல் விழிப்புணர்ச்சியில் உயர பறந்து கொன்டு இருப்பதாக கூறிக் கொள்கிற்கிறோமே ஒழிய, இந்த கூட்டு களவாணிக் கூட்டத்தால் மாறி மாறி கற்பழிக்கப்பட்டு பாழாக்கப்படும் கீழக்கரையின் கதறலை அறியமாட்டீர்களா? களங்கப்படுத்தப்படும் கீழக்கரையின் ஆண்மாவை கவசமிட்டு காத்திட இந்த ஒரு முகைதீன் இப்ராஹீமால் மட்டும் முடியுமோ…. அய்யகோ…. நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட மாதரை நினைத்து விட்டால்…… என மகா கவி பாரதி நம்மை போன்றோரை மனதில் வைத்துதான் பாடியிருப்பானோ?

  தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்கள், கீழ் நிலையில் ஆளும் மற்றும் அதிகார வர்கத்தை நம்பி தமது ஆட்சிக்கு நற்பெயரை சம்பாதிக்கும் நோக்கத்துடன், திட்டத் தொகைகளை வாரி வழங்குகிறார்கள், ஆனால் இவர்களோ அதனை அணுபவ பாத்தியமாக எண்ணி கொழித்து திளைக்கிறார்கள். மீண்டும் ஒரு காலம் வரும், ஆரத்தழுவி வாக்கு கேட்டு் மக்களிடம் இந்த கேடுகெட்டவர்கள் வருவார்கள்… அப்போது செருப்பால் அடிக்கும் நிலை வரும் இங்கே என ஒரு சமூக ஆர்வலர் அன்று நடந்த கூட்டத்தில் பேசினார், அதற்கு முன் புரட்சித் தலைவி அம்மா தலைமையிலான தமிழக அரசு தன் சவுக்கை சுழற்ற வேண்டும் என்பதே கீழக்கரை மக்களின் வேண்டுகோள்...

  முற்றும்...

  ReplyDelete
 7. நகராட்சி தலைவி எத்தனை முறை இந்த டைலாக்கை செல்லுவிங்க தயவு செய்து மாத்தி சொல்லுங்க

  ReplyDelete
  Replies
  1. நகராட்சி தலைவி சொல்றாங்க "அது முடியாதுங்க, எங்கள பதவியிலிருந்து அப்புறப்படுத்தும் வரை நாங்க இதே டையலாக்க பாடிகொண்டே தான் இருப்போமுங்க" அதனால வேற வழியின்றி தேர்ந்தேடுத்தவங்கலான நாம் "எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவில்லை......." என்று பாடிக் கொண்டிருக்க வேண்டியது தான்.

   Delete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.