கீழக்கரையில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். வெளியூரைச் சேர்ந்த பலர் இங்கு வேலைக்காக வந்து செல்கின்றனர்.வெளியூர் பஸ்கள் ஊருக்குள் உள்ள பஸ் ஸ்டாண்டுக்கு வராமல் 2 கிமீ தூரம் உள்ள ஏர்வாடி விலக்கு ரோட்டில் திரும்பி செல்கின்றன. இதனால் நள்ளிரவில் பஸ்சில் வந்திறங்கும் பயணிகள் ஊருக்குள் வருவதில் கடும் சிரமப்படுகின்றனர்.
இங்குள்ள பஸ் ஸ்டாண்ட் உரிமம் 2009ல் முடிவடைந்தது. பஸ் நிலைய உரிமத்தை நகராட்சி நிர்வாகம் இதுவரை புதுப்பிக்காததால்தான் பஸ்கள் ஊருக்குள் வருவதில்லை எனவே உரிமத்தை நகராட்சி நிர்வாகம் உடனடியாக புதுபித்து மக்களின் சிரமம் போக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து கீழக்கரை நுகர்வோர் உரிமை பாதுகாப்பு கழக பொருளாளர் செய்யது இபுராகிம் கூறுகையில்,
கீழக்கரை பஸ் ஸ்டாண்டில் கட்டண கழிப்பறை, பஸ்கள் வந்து செல்லும் விபரம் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாததால் போக்குவரத்து அதிகாரிகள் உரிமம் வழங்க முன்வருவதில்லை. இதனால் பொதுமக்கள் வெளியூர் செல்ல 2 கிமீ தூரம் உள்ள ஏர்வாடி விலக்கு ரோடு சென்று பஸ்சை பிடிக்க ரூ.60 கொடுத்து ஆட்டோவில் செல்ல வேண்டியுள்ளது.
பொதுமக்களின் நலன் கருதி கீழக்கரை பஸ் ஸ்டாண்டில் போதிய அடிப்படை வசதிகள் செய்து உரிமத்தை புதுப்பிக்க கீழக்கரை நகராட்சிக்கு உத்தரவிட மாவட்ட நிர்வாகம் முன் வர வேண்டும் என்றார்.
இது குறித்து நகராட்சி தலைவர் ராவியத்துல் காதரியா தரப்பில் கேட்ட போது ,
இதற்கான ஏற்பாடுகள் நிறைவடைந்து விட்டது.விரைவில் இப்பிரச்சனை தீரும் என்றார்.
சேச்சே, நகரின் எந்த மக்கள் நல பிரச்சனையை எடுத்துக் கொண்டாலும் முட்டுக் கட்டையாக் இருப்பது நகராட்சி நிர்வாகமே.
ReplyDeleteஎந்த பிரச்சனைக்கும் நகராட்சி தலைவியின் ஒரே மாதிரியான சப்பைக் கட்டு. புளித்து விட்டது. யாருக்கும் வெட்கம் இல்லை.
ஓட்டு போட்ட மக்களே. ஒரு விஷயம் உங்களுக்கு தெரியுமா? புதிய பேருந்து நிலையத்தில் கோலாகலமாக தொடங்கப்பட்ட மின் கட்டண் வசூல் மையத்தை பயன்படுத்த மக்களுக்கு நாட்டம் இல்லையாம்.!!!! சிரமப்பட்டு வண்ணான் துறையில் உள்ள மின் அலுவலக்த்தில் கட்டத்தான் விருப்பமாம். இதன் காரணமாக மின் கட்டண வசூல் மையம் தொடங்கிய நாள் முதலே விலை உயர்ந்த கோத்ரேச் பூட்டு போட்டு பூட்டப்பட்டுள்ளதாம்.உண்மையா?
இதற்கும் நகராட்சி தலைவியின் புன்னகையுடன் கூடிய வழக்கமான பதில் தானே?