Thursday, June 27, 2013

கீழக்கரையில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி!நூற்றுக்கணக்காண மாணவ,மாணவியர் பங்கேற்பு!



கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டுநலப்பணி திட்டம் சார்பாக போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் அபுல் ஹசன் சாதலி தலைமை வகித்தார்.கீழக்கரை காவல்துறை இன்ஸ்பெக்டர் கனேசன் முன்னிலை வகித்து பேரணியை கொடியசைத்து துவங்கி வைத்தார்.
இதில் போதை பொருள் உபயோக படுத்துவதால் ஏற்படும் தீமைகளை விளக்கி பதாகைகள் கேந்தி சுமார் 450க்கும் மேற்பட்ட மாணவ,மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
பேரணி டி.ஏஸ்.பி. அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு கீழக்கரை கடற்கரை வரை சென்றது..
இதில் பேராசிரியர்கள் மருதாலசமூர்த்தி,சாஹுல் ஹமீது,பாலமுருகன்,விமலி,உடன் சென்றனர்.ஏற்பாடுகளை நாட்டுநலப்பணி திட்ட அலுவலர் ஆனந்த் செய்திருந்தார்

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.