Saturday, June 15, 2013

கீழக்கரை நகருக்குள் மின்சார கட்டண அலுவலகம் திறக்கப்பட்டது! நகராட்சிக்கான வரியும் அங்கேயே செலுத்த ஏற்பாடு!



கீழக்கரையில்  பல்லாண்டுகளாக தனியார் கட்டத்தில் இயங்கி வந்த மின் கட்டண அலுவலகம் சென்ற நகராட்சி நிர்வாகத்தின் போது ஊருக்கு வெளியே வண்னாந்துரை  அருகே மாற்றப்பட்டது.

இதனால் கீழக்கரை மக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாயினர்.இது குறித்து பல்வேறு தரப்பினரும் மீண்டும் ஊருக்குள் அமைக்க கோரிக்கை விடுத்தனர்

தற்போதைய நகராட்சி நிர்வாகத்தின் நடவடிக்கையின் பேரில் பேருந்து நிலையத்தில் இடம் ஒதுக்கப்பட்டு அலுவலகத்துக்கான கட்டுமான பணிகள்
நிறைவடைந்து நீண்ட கால காத்திருப்புக்கு பின்  இன்று மின் கட்டண அலுவலகம் மற்றும். நகராட்சி வரி வசூல் மையமும்  திறக்கப்பட்டுள்ளது



இந்நிகழ்ச்சியில் கீழக்கரை நகராட்சி தலைவர் ராவியத்துல் காதரியா,துணை தலைவர் ஹாஜா முஹைதீன்,கமிஷனர் முஹம்மது முகைதீன்,மின்சார துறை உயர் அதிகாரி அசோக்குமார், கவுன்சிலர்கள்,அதிமுக,எஸ்டிபிஐ உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்களும்,மற்றும் பல்வேறு சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இது குறித்து நகராட்சி தலைவர் ராவியத்துல் காதரியா கூறியதாவது,

மின் கட்டண அலுவலகம்  திறக்க உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.


எஸ்டிபிஐ சேர்ந்தவர்கள் கூறியதாவது,

தாமதமாவதை கண்டித்து எஸ்டிபிஐ சார்பில் போராட்டங்கள் அறிவிக்கப்பட்டு பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. திறக்க உதவிய அனைவருக்கும் எஸ்டிபிஐ சார்பில் நன்றி

மேலும் தமுமுகவை சேர்ந்த இர்பான் கூறியதாவது ,

சில  நாட்களுக்கு முன் பேராசிரியர் ஜவஹிருல்லா அவர்களிடம் கட்டண நிலையம் தாமதம் குறித்து தெரிவித்தோம். ஏற்கெனவே பேசியுள்ளதாக தெரிவித்தோடு உடனடியாக சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் பேசினார்.நகராட்சியுடன் வாடகை ஒப்பந்தம் சம்பந்தமாக தாமதாமாவதாக தெரிவித்தார் உடனடியாக தீர்வு காணப்படும் என்றார் அதன்படி ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ மற்றும் நகராட்சியின் முயற்சியோடு தற்போது திறக்கப்பட்டுள்ளதால் மிக்க மகிழ்ச்சி என்றார்.

ஒருவழியாக ஊருக்குள் மின் கட்டண அலுவலகத்தை கொண்டு வரமுயற்சி செய்த அனைவருக்கும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்
 

2 comments:

  1. இந்த வசுல் மைய்யம் திறக்க மிகவும் பாடுபட்டவர்கள் SDPI சகோதர்கள் இதை ஊர் நன்கு அறியும் .இதில் TMMK சகோதர்கள் ஏன் சுயவிளம்பரம் தேடி கொள்கிறகள்

    ReplyDelete
  2. மங்காத்தாவின் தங்கச்சி மகன்June 15, 2013 at 11:05 PM

    நகரின் மக்கள் நலனில் அபரிதமான அக்கறை கொண்ட பொது நல அமைப்புகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் தொடர் முயற்சியால் மின் கட்டண வசூல் மையம் தொடங்கியது நன்றி செலுத்த வேண்டிய, வரவேற்கத்தக்க நிகழ்ச்சியாகும்.

    இருப்பினும் இந்த அலுவலகத்தை கணிணி மயமாக்கினால் மட்டுமே மக்கள் முழுப் பயனையும் அடைய முடியும். சம்பந்தப்பட்டவர்கள் விரைந்து இதே முனைப்பை காட்டி செய்து முடிப்பார்கள் என பரிபூர்ணமாக நம்புவோமாக.

    மேலும் கூடுதல் செய்தியாக,வளர்ந்து வரும் அப் பகுதியின் மக்களுக்கு பேருதவியாக நகராட்சியின் வீடு மற்றும் தண்ணீர் வரியை கட்டுவ்தற்கும் அதே மையத்தில் முன் கூட்டியே அறிவிக்காமல் வசதி செய்திருப்பதும் மக்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியாகும்.

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.