Friday, June 14, 2013

கீழக்கரையில் விரைவில் கடலோர காவல் நிலையம்! தமிழக காவல்துறையின் ஏ.டி.ஜி.பி. சைலேந்திரபாபு தகவல்!


2011ம் ஆண்டு டிசம்பர் மாதம் கீழக்கரையில் ஈடிஏ அஸ்கான் ஸ்டார் நிறுவனத்தின் மேலான்மை இயக்குநர் சலாஹுதீன்,கீழக்கரை கோல்டன் பீச் பகுதியில் கடலோர காவல் நிலையம் அமைக்க 30 சென்ட் இடத்தை அரசாங்கத்திற்க்கு இலவசமாக வழங்கி அதற்கான ஆவனங்களை கடலோர பிரிவு எஸ்பி முகம்மது ஹனிபாவிடம்  ஒப்படைத்தார்.



ராமநாதபுரம்: தமிழ்நாட்டில் மேலும் 30 இடங்களில் கடலோர காவல் பிரிவு நிலையங்கள் அமைக்கப்படும் என தமிழக காவல்துறை கூடுதல் தலைவர் சைலேந்திரபாபு கூறினார்.

தமிழக கடலோர பகுதிகளில் சமூக விரோத செயல்கள் நடைபெறாமல் தடுப்பதற்காகவும், சூறவாளி, புயல் போன்ற ஆபத்துகளில் சிக்கிக் கொள்ளும் மீனவர்களை மீட்பதற்காகவும், கடல் வழி கடத்தல்களை தடுப்பதற்காக தமிழக அரசால் கடலோர காவல் பிரிவு அமைக்கப்பட்டது. இவர்களுக்கு, கடலில் ரோந்து செல்வது பற்றிய பயிற்சி ராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்தில் அளிக்கப்பட்டு வருகிறது.

இதனை பார்வையிட தமிழக காவல்துறையின் ஏ.டி.ஜி.பி. சைலேந்திரபாபு மண்டபம் வந்திருந்தார். அப்போது அவர் நிருபர்களிடம்

‘‘தமிழ்நாட்டில் கடலோர பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் மேலும் 30 இடங்களில் கடலோர பாதுகாப்பு பிரிவு (கோஸ்டல் விங்) அமைக்கப்பட உள்ளது. இதற்கான இடங்களும் தேர்வு செய்யப்பட்டு விட்டது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேஸ்வரம், கீழக்கரை, தொண்டி, வாலிநோக்கம் உள்ளிட்ட 6 இடங்களும் இதில் அடங்கும். இங்கு துவங்கப்பட உள்ள கடலோர காவல் பிரிவுகளுக்காக 20 ரோந்து படகுகள் புதிதாக வாங்கப்பட உள்ளன.

     
இப்பிரிவில் பணியாற்றும் காவலர்களுக்கு கடலில் ஏற்படும் சூழலை சமாளிக்க தேவையான பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. நீச்சல் பயிற்சி, வாட்டர் ஸ்கூட்டர் பயிற்சி, கடலின் 60 அடி ஆழம் வரை சென்று வரும் பயிற்சி உள்ளிட்ட பயிற்சிகள் இதில் உள்ளன. தற்போது 58 காவலர்களுக்கு இப்பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு கட்டமாக மண்டபம் கடலோர காவல் படை மையத்தில் 3 நாள் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. அடுத்த கட்டமாக சென்னையில் இந்த பயிற்சி அளிக்கப்படவுள்ளது. தற்போது தமிழக கடலோர பகுதிகளில் பாதுகாப்பை மேம்படுத்த இப்பயிற்சிகள் உதவும்’’ என்றார்.

2011ம் ஆண்டே கீழக்கரையில் இதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு ஒப்படைக்கப்பட்டு விட்டது குறிப்பிடத்தக்கது
2011ம் ஆண்டு கீழக்கரையில்  கடலோர பாதுகாப்பு அலுவலகம் அமைக்க இடம் தேடப்பட்டு வந்தது.இதற்கான இடவசதி அளிக்குமாறு ஈடிஏ நிறுவனத்தின் மேலான்மை இயக்குநர் சலாஹுதீனிடம் அப்போதைய ஊட்டி பிரிவில் டிஎஸ்பியாக பணியாற்றிய தியாகராஜன் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதனையடுத்து மேலத்தெருவில் செய்யது முகம்மது அப்பா தர்ஹா செல்லும் வழியில் கோல்டன் பீச் பகுதியில் இலவசமாக 30 சென்ட் இடத்தை ஒதுக்கி அதற்கான் பத்திரத்தை கடலோர பிரிவு எஸ்பி முகம்மது ஹனிபாவிடம் சலாஹுதீன் அப்போது ஒப்படைத்தார்..

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.