Saturday, June 22, 2013

கீழக்கரையில் பாதாள சாக்கடை திட்டம் , நகராட்சியை கலைப்பது குறித்த தீர்மானம் உள்ளிட்டவைகள் குறித்து ஜவஹிருல்லாஹ்.எம்.எல்.ஏ பேட்டி


கீழக்கரை மேலத்தெரு உஸ்வதுன் ஹஸனா முஸ்லீம் சங்கத்தினரை ஜவஹிருல்லா.எம்.எல்.ஏ சந்தித்து பேசினார்


கீழக்கரை நகருக்கு வருகை தந்த ஜவாஹிருல்லாஹ் எம்.எல்.ஏ கீழக்கரையில் பல்வேறு இடங்களுக்கு சென்று  பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். கீழக்கரையில் நிலவும் சுகாதார சீர்கேடு உள்ளிட்ட பல்வேறு குறைகளை பற்றி அவரிடம் புகாரளித்தனர்.

கீழக்கரையை சேர்ந்த அரசியல் பிரமுகர் ஒருவர் மீது நில மோசடி தொடர்பாக பெண் ஒருவர் புகார் மனு அளித்தார். புகார் மனுக்களை பெற்று கொண்ட ஜவஹிருல்லா.எம்.எல்.ஏ. விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்



கீழக்கரையில் பாதாள சாக்கடை திட்டம் ,கீழக்கரை  நகராட்சியை கலைப்பது குறித்த தீர்மானம்,கீழக்கரையில் திறந்து ஒரே நாளில் மூடி கிடக்கும் மின் கட்டண அலுவலகம்,கடல் அட்டை தடை நீக்கம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து ஜவஹிருல்லா.எம்.எல்.ஏ கீழக்கரையில்  பேட்டியளித்தார்.

அவர் கூறியதாவது,

கீழக்கரை நகராட்சி செயல்பாடு குறித்து ஏராளமான புகார்கள் வந்துள்ளது ஏற்கெனவே கீழக்கரை நகராட்சியை கலைக்க நகர் தமுமுக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது இதை பற்றி அரசிடம் வலியுறுத்துவது குறித்து ஆய்வு செய்து தொடர் நடவடிக்கை எடுக்கப்படும்.

கீழக்கரை பேருந்து நிலையத்தில் மின் கட்டண அலுவலகம்  அமைக்கப்பட்டு அவசர,அவசரமாக நகராட்சி நிர்வாகத்தால் திறப்பு விழா நடத்தப்பட்டு தற்போது மூடப்பட்டு கிடக்கிறது இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
கடல் அட்டையை பிடிக்க தடை விதித்துள்ளது தேவையில்லாதது.கடல் அட்டை அழியும் இனமல்ல  கடல் அட்டை தடையை நீக்கம் குறித்து முதல்வர் ஜெயலலிதா அவர்களிடம் பேசியுள்ளேன்.மத்திய அமைச்சரிடம் பேசியுள்ளேன்.தொடர்ந்து கடல் அட்டை தடையை நீக்குவதற்கான முயற்சியை மேற்கொண்டுள்ளேன்.விரைவில் இதற்கு தீர்வு காண்போம்.


கீழக்கரை பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வருவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.சட்டசபையில் இது பற்றி பேசியுள்ளேன்.விரைவில் இத்திட்டம் செயல்படுத்துவதற்கான அறிவிப்பு வரும்.
இவ்வாறு அவர் கூறினார்


 

3 comments:

  1. Oru MLA Ku nakaratchiya kalaikka athikaaram illai enbathu ivarukku theriyaatha! Muthalil Ivar MLA pathavi irukkuthannu paarppom!

    ReplyDelete
  2. போன வருடம் நகராச்சியில் கூட்டம் போட்டாரு மக்களுக்கு எதுவும் செய்யவில்லை கீழக்கரையில் செயல் இழந்த தமுமுகவை மீன்டும் நிமிர்த்த சும்மா படம் காட்டுராங்க
    தலைவா கீழக்கரை மக்கள் முட்டால் இல்லை

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.