கீழக்கரையில் சில மாதங்களாக டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டு கல்லூரி மாணவர் ,மாணவி உள்ளிட்ட 5க்கும் மேற்பட்டோர் உயிரழந்துள்ளனர்.
உயிரழப்பு ஏற்பட்டவுடன் விரைந்து நடவடிக்கை எடுக்கும் அரசாங்கம் பின்னர் நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரபடுத்துவதில்லை.இதனால் தற்போது மீண்டும் கீழக்கரையில் டெங்கு மற்றும் மலேரியா நோய்கள் அதிகரித்து வருவதாக பாதிக்கப்பட்டோர் குற்றம் சாட்டுகின்றனர்.மேலும் நோய்கிருமிகள் உற்பத்தி ஆகி பரவும் வகையில் நகரில் பல இடங்களில் கழிவுநீர் கால்வாய் சரியாக தூர் வாரப்படாமல் ஆங்காங்கே அடைப்புகள் ஏற்பட்டு சாலைகளில் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.இதை உடனடியாக நகராட்சி நிர்வாகம் சீர்படுத்த வேண்டுமென கேட்டு கொண்டுள்ளனர்.
இது குறித்து சமூக ஆர்வலர் அபு சாலிஹ் கூறுகையில் ,
நல்ல தண்ணீரிலிருந்து உருவாகும் டெங்கு கொசுக்கள் அதிகளவில் உள்ளது.இதனால் கீழக்கரை பகுதியில் பல இடங்களில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படோர் அதிகரித்து வருகின்றனர்.அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை வேண்டும் என்றார்.
கீழக்கரை ஆடறுத்தான் தெரு பகுதியை சேர்ந்த லெப்பை தம்பி கூறுகையில் ,
எங்கள் பகுதியில் கழிவு நீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடுகிறது.பல முறை நகராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்து எவ்வித நடவடிக்கையும் இல்லை.இதனால் மலேரியா உள்ளிட்ட பல்வேறு நோய்கள் பரவி வருகிறது.உடனடி நடவடிக்கை தேவை என்றார்.
இது செய்யது இப்ராஹிம் என்பவர் கூறுகையில்,
கீழக்கரையிருந்து டெங்கு,மலேரியா உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டு 30க்கும் மேற்பட்டோர் மதுரை ,ராமநாதபுரம் உள்ளிட்ட மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.அரசு நிர்வாகம் டெங்கு இல்லை ,மலேரியா இல்லவே இல்லை என்று அறிக்கை வெளியிடுவதில் காட்டும் ஆர்வத்தை நோய் தடுப்பு நடவடிக்கையில் காட்ட வேண்டும் என்றார்.
கழிவு நீர் கிடக்கட்டு ,
ReplyDeleteஅதன் அறுகாமையில் இருக்கும் உணவு விடுதியை பாருங்கள்?
இது போன்ற சுகாதார கேடு விளைவிக்க கூடிய தரமற்ற உணவு விடுதிகளை அகற்ற ஏதேனும் முயற்சி மேற்கொண்டுள்ளதா ?
அன்புடன் கீழக்கரை டைம்ஸ்-க்கு
ReplyDeleteபோட்டோவில் சிகப்புக் கட்டத்துக்குள் காட்டியதைப் பார்க்கும்போது "இந்தக் கடையிலே சிக்கன் கறியுடன் சிக்கன் குனியாவும் கிடைக்கும்" என விளம்பரம் செய்வது போன்று இருக்கு.
முக்கியமான இந்த ஏரியாவை நம்ம சேர்மன் கடந்து செல்கிறார்களோ இல்லையோ? Chairman's Remote Control-ம் துணைச் சேர்மனும் அத்துடன் வார்டு மெம்பரும் நிச்சயம் கடந்து செல்வார்கள், ஏன்னா அவங்க ஆண்கள். அவங்க பார்வையில் இதெல்லாம் படாதோ?
சிலமாதங்களுக்கு முன்னர் கூட தங்கள் பதிவில் நகராட்சிக் கமிஷனர் கடை கடையாப் புகுந்து செக்கிங் பண்ணி ஹோட்டல் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை கொடுத்ததாக கீழக்கரை டைம்ஸ்-ல வாசித்தது போன்று ஒரு ஞாபகம். அதுலாம் அன்றோடு முடிந்து விட்டதா என்ன?