கீழக்கரையைச் சேர்ந்த பெரும்பாலானோர் வெளிநாடுகளிலும், டெல்லி, மும்பை, பெங்களூரு, சென்னை ஆகிய நகரங்களிலும் தொழில் நிறுவனங்களை நடத்தி வருகிறார்கள் எனவே இப்பகுதியில் பயணிகள் போக்குவரத்து அதிகளவில் இருக்கும் . ராமநாதபுரத்தில் இருந்து சென்னை செல்லும் அனைத்து ரயில்களிலும் கீழக்கரையைச் சேர்ந்தவர்கள் 50 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் பயணித்து வருகின்றனர்.இப்பகுதியில் பயணிகள் ரயிலுக்கு அதிக வருமானம் ஈட்டி தரும் நகரமாக கீழக்கரை விளங்குகிறது.
இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் கீழக்கரை கடற்கரை அருகே உள்ள பழைய சினிமா திரையரங்கில் டிக்கெட் கவுண்டர் செயல்பட்டு வந்த நிலையில் அகல ரயில் பாதை அமைக்கும் பணி நடைபெற்ற சமயம் மூடப்பட்ட ரயில் முன்பதிவு மையத்தை தற்போது கணினி மயமாக்கப்பட்ட பயணசீட்டு முன்பதிவு மையமாக ஏற்படுத்தி மீண்டும் திறக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.