.
100 மீட்டருக்கும் அதிகமாக தூரம் வேனை இழுத்து உடல் வலிமையை நிரூபித்த கீழக்கரையை சேர்ந்த பியர்ல் மாண்டிச்சோரி பள்ளி மாணவர்கள் (பழைய படம்)
கீழக்கரை மற்றும் சுற்று வட்டார கிராமப்புற மாணவ, மாணவியர் மத்தியில் விளையாட்டை மேம்படுத்தும் வகையில் கீழக்கரையில் அரசு விளையாட்டுப் பயிற்சி மையம் அமைக்க அரசு முன்வர வேண்டும் என இளைஞர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் விளையாட்டை மேம்படுத்த தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் அரசு பல கோடி ரூபாய் செலவழித்து வருகிறது. மாவட்டம்தோறும் விளையாட்டு அரங்கம், விடுதிகள் அமைத்து வெயிட் லிப்ட், பவர் லிப்ட், பெஞ்ச் பிரஷ், ஸ்கேட்டிங், நீச்சல், டென்னிஸ், தடகளம், வாலிபால், கால்பந்து, ஹாக்கி, குத்துச்சண்டை ஆகிய விளையாட்டுகளுக்கு தேர்வு செய்யப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
கடந்த ஆட்சியின்போது வட்டார அளவில் மாணவ, மாணவியரின் திறமைகளை வெளிக்கொண்டு வரும் வகையில் தாலுகா வாரியாக ஸ்டேடியம் துவக்கப்பட்டன.
கீழக்கரை நகர் சுற்றியுள்ள கிராமங்களின் மத்திய பகுதியாக விளங்கி வருகிறது. எனவே சுற்று வட்டார கிராம மாணவ, மாணவியர் பயன்பெறும் வகையில் கீழக்கரையில் அரசுக்குச் சொந்தமான இடத்தில் விளையாட்டுப் பயிற்சி அரங்கம் அமைத்து மாணவர்கள் பயிற்சி பெற ஆணையம் சார்பில் உபகரணங்களும் வழங்க வேண்டும் என்பதே விளையாட்டு ஆர்வலர்களின் விருப்பமாக உள்ளது.
கீழக்கரையில் இளைஞர்கள் ஏராளமானோர் விளையாட்டில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர். மார்னிங் ஸ்டார், சவுத் ஸ்டார் தங்கள் அணிகளுக்குப் பெயர்களை சூட்டியுள்ளனர். அல் ஜதீத், மூர்அணி, மைபாஅணி எனக் கைப்பந்து விளையாட்டு கிளப்களும் உள்ளன.
இந்த அணிகளில் அதி வேகத்தில் துல்லியமாக, நேர்த்தியாகப் பந்து வீசுபவர்களும் உள்ளனர். அதேபோல்கீழக்கரையில் சிறுவர் மற்றும் இளைஞர்களின் விளையாட்டு திறனை மேம்படுத்த அரசு விளையாட்டு பயிற்சி மையம் அமைக்க தொடரும் கோரிக்கை!
இப்பகுதியில் ஏராளமான சின்னஞ்சிறு மாணவர்கள் உடல் வலிமையிலும்,தடகளம்,கால்பந்து உள்ளிட்டவிளையாட்டு துறைகளில் பல்வேறு திறமைகளுடன் சிறந்து விளங்குகின்றனர்.
இப்பகுதியில் அரசு சார்பில் விளையாட்டுப் பயிற்சி மையம் அமைத்தால் திறமையான வீரர்களை உருவாக்க முடியும் என்று இளைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது போன்ற நல் முயற்சிகளுக்கு நமது நகரில் பெரும் முட்டுக் கட்டையாக இருப்பது இடப் பிரச்சனையே.
ReplyDeleteமனம் இருந்தால் மார்க்கம் உண்டு.உறுதியான முறையில் ஒரு அமைப்பை ஏற்படுத்தி, அவர்களும் கீழக்கரை உஸ்வத்துல் ஹஸனா முஸ்லீம் சஙகமும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம்(M.O.U - MEMORANDUM OF UNDERSTANDING) செய்து கொண்டு அவர்களின் ஹமீதியா விளையாட்டு திடலை நல்ல முறையில் நடைமுறைப் படுத்தலாம்.
பூனைக்கு யார் மணி கட்டுவது?