Wednesday, June 5, 2013

கீழக்கரை நகராட்சியில் குப்பை சேகரிப்பு புதிய வாகனம் பழுது !சுகாதாரகேடு நிலவுவதாக குற்றச்சாட்டு!



படங்கள் :கவுன்சிலர் முகைதீன் இப்ராகிம்

கீழக்கரை நகராட்சியில் குப்பை சேகரிப்பு புதிய வாகனம் பழுது !சுகாதாரகேடு நிலவுவதாக குற்றச்சாட்டு!

இது குறித்து கீழக்கரை நுகர்வோர் பாதுகாப்பு கழக பொருளாளர் செய் யது இபுராகிம் கூறுகையில்
கீழக்கரை நகராட்சியில் ஏற்கனவே ஒரு டெம்பர் பிளாசர் பயன்பாட்டில் உள்ள நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன் ரூ.22 லட்சம் மதிப்பில் புதிய டெம்பர் பிளாசர் வாகனம் வாங்கப்பட்டது. கடந்த 5 நாட்களுக்கு முன் பழைய டெம்பர் பிளாசர் ஹைட்ராலிக் பழுதானது. அதை ஓரங்கட்டி விட்டு புதிய டெம்பர் பிளாசரை பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. பயன்பாட்டுக்கு கொண்டு வந்த முதல் நாளே அதிலுள்ள ஹைட் ராலிக் வேலை செய்யாத தால் குப்பைகளை சேக ரிக்க இயலாத நிலை உள் ளது.

இதனால் நகரில் மலைபோல் குவிந்த குப்பைகள் அகற்றப்படாமல் சுகாதாரக்கேடு நிலவுகிறது. புதிதாக வாகனத்தை அதிகாரிகள் சரியாக ஆய்வு செய்யாமல் வாங்கியதால் முறைகேடு நடந்திருப்பதாக சமூக ஆர்வலர் கள் புகார் எழுப்பியுள்ளனர்.

புதிய டெம்பர் பிளாசரில் பொருத்தப்பட்டுள்ள ஹைட்ராலிக் மிஷின் மீது பெயின்ட் அடித்துள்ளனர். இதனால் வாகனம் வாங்கியதில் முறைகேடு நடந்திருப்பதாக மக்களுக்கு சந்தே கம் எழுந்துள்ளது. வாக னம் வாங்கியது தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்

2 comments:

  1. என்னப்பா பெரிய ரோதனையாப்போச்சு. ஒரு இயந்திரம் / வாகனம் என்றால் பழுது ஏற்படுவது இயல்பு தான், அத என்ன அப்படியே கிடப்புல போட்டுடுடவா முடியும். டக்கு புக்குனு பழுது நீக்கி பயன்பாட்டுக்கு இறக்கி விடவேண்டியதுதானே. நீங்களும் நல்லா அங்கே இங்கேனு ஓடி ஓடி போட்டோ எடுத்துப் போடுறீங்க செய்தி போடுறீங்க NO USE and TIME WASTE. PDI (Pre Delivery Inspection) Certificate வாங்காமலேயே புதிய வாகனத்த பயன்பாட்டுக்கு இறக்கிட்டாங்களோ?
    தில்லு முல்லு... தில்லு முல்லு.... நம்ம நகராட்சி நிர்வாகம் எங்கும் எதிலும் தில்லு முல்லு... தில்லு முல்லு.... எங்கே நம்ம Brother (மங்காத்தாவின் தங்கச்சி மகனோட) Comments.....

    ReplyDelete
  2. மங்காத்தாவின் தங்கச்சி மகன்June 6, 2013 at 8:15 PM

    (மறு பதிப்பு)கண்டதே காட்சி கொண்டதே கோலம் என கடந்த ஒன்னரை ஆண்டு காலமாக எங்கும், எதிலும் ஊழல் என செயல்படும் நகராட்சி நிர்வாகத்தில் இனி மக்கள் நல பணிகள் ஊழலுக்கு அப்பாற்பட்டு நடப்பதாக செய்திகள் வந்தால் மட்டுமே அது நற்செய்தியாகும். மற்ற செய்திகளெல்லாம் நாம் பெற்று வந்த வரம் அப்படி என நினைத்து ஓட்டு போட்ட பாவத்திற்காக தலையில் அடித்துக் கொண்டு மீதமுள்ள மூன்றாண்டுகளை கடத்த வேண்டியதுதான். இது காலத்தின் கட்டாயம்.

    மேலும் நீங்களும் சொல்லி விட்டீர்கள். NO USE AND TIME WASTE என்று. அடியேனின் கருத்து அதுவே தான்.தில்லு முல்லு மட்டும் இல்லை. இப்போது மக்கள் பிரதிநிதிகளிடையே தல்லு முல்லு. அதனால் தான் கடந்த 31/05/13 வெள்ளி கிழமை கீழக்கரை ஹிசைனியா கல்யாண் மண்டபத்தில் 18 வது வார்டு மக்கள் பிரதிநிதி சகோதரர் முகைதீன் இபுராகீம் அவர்களின் பெரும் முயற்சியால் கூட்டப்பட்ட கூட்டத்திற்கு மக்கள் பிரதிநிதிகள் யாருமே வரவில்லை எனபது கசப்பான உண்மை. அக் கூட்டத்தின் நிகழ்வுகளை தெள்ளத் தெளிவாக கீழக்கரை டைம்ஸில் கண்டு ஆனந்த கண்ணீர் விட்டிருக்கலாம்.

    ஒரு சமயம் இந்த வாகனம் செகண்ட் ஹேண்ட் வாகனத்தின் மறுபிறப்போ? படைத்தவனே உனக்கே வெளிச்ச்ம். இந்த ஜகத்தால பிதா மக்கள் இதையும் செய்வார்கள். எதையும் செய்வார்கள்.யாமறியோம் பராபரமே!!!

    அது சரி. அல்லா ஒருவனுக்கே பயந்த மனசாட்சி கிலோ என்ன விலைங்க? எங்கே கிடைக்கும்?அறிந்தவர்கள் விவரம் தாருங்களேன்.நிச்சயமாக சத்ததியமாக உறுதியாக எந்த விதமான பிரதி பலனும் எதிர் பார்க்காமல் உங்களுக்கு துவா செய்கிறோம்.( ரகசியம் பாதுகாக்கப்படும்).

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.