Wednesday, June 26, 2013

கீழக்கரை அரசு மருத்துவமனையில் 25 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி



 கீழக்கரை அரசு மருத்துவமனையில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் சார்பில் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவ வசதிகள் உள்ளதை வெளிபடுத்தவும் பிரசவத்திற்கு தேவையான மருத்துவர்கள் மருத்துவ வசதிகள்,மருத்துவர்கள்,பிரசவ கால முன் பின் பராமரிப்புபொன்றவற்றையும்,தொற்றில்லா நோய்களை கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் திட்டம் தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தலைமை மருத்துவர் கலா துரைசாமி தலைமை வகித்தார், மருத்துவர்கள் ராஜ் மோகன்,ஜவாஹிர் உசைன்,ஷாஹுல் ஹமீது,ஹசீன்,முத்தமிழ் அரசி முன்னிலை வகித்தனர்.

இதில் கீழக்கரை ,காஞ்சிரங்குடி,மாயாகுளம் உள்பட சுற்று வட்டார கிராமங்களிலிருந்து வந்திருந்த 25 கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.மருத்துவமனை மேற்பார்வையாள ராணி மற்றும் ஹமீதியா பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஞான லீலாவதி ஆகீயோர் வளைகாப்பு  பணிகளை செய்தனர்.
இதனை தொடர்து தொற்றில்லா நோய் கண்டறிந்து சிகிச்சை குறித்து டாக்டர் ஜவாஹிர் Hஉசைன் விளக்கம் அளித்தார்.

40 வயதிற்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் அவசிசியமாக தொற்றில்லா நோய்களான சக்கரை ரத்த அழுத்தம் கர்ப்ப வாய் புற்று நோய் உள்பட பல்வேறு நோய்க்ளை கண்டறிந்து சிகிச்சை அளிப்பதற்கு அனைத்து வசதிகளும் கீழக்கரை அரசு மருத்துவ மனையில் உள்ளது அனைவரும் பயன் படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.