Sunday, June 30, 2013

கீழக்கரையில் சேதமடைந்த மின்கம்பங்களால் தொடரும் ஆபத்து!



கீழக்கரை,: கீழக்கரை புதிய பஸ்ஸ்டாண்டு அருகே வளைவில் உள்ள மின்கம்பம் வளைந்து எப்போது வேண்டுமானாலும் விழுந்து ஆபத்தை ஏற்படுத்தும் நிலையில் உள்ளது. இதை உடனடியாக மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கீழக்கரையில் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட மின்கம்பங்கள் மற்றும் மின் வயர்கள்தான் தற்போதும் உள்ளது.  மின்கம்பங்கள் பல இடங்களில் சேதமடைந்தும், மின்வயர்கள் பல இடங்களில் ஜாயின்டுகள் போட்டும் அறுந்து விழும் நிலையில் உள்ளது.

புதிய பஸ்ஸ்டாண்டு வளைவில் 10 நாட்களுக்கு முன்பு மணல் லாரி மோதியதில் இரும்பு மின்கம்பம் பலத்த சேதமடைந்து வளைந்து கிழே விழும் நிலையில் உள்ளது. இப்பகுதியில் மக்கள் நடமாட்டமும் வாகன போக்குவரத்தும் அதிகமாக உள்ளது. இப்பகுதியில் நடந்து செல்பவர்கள் அச்சத்துடன் செல்கின்றனர். இதுகுறித்து இப்பகுதி மக்கள் மின்வாரியத்திற்கு தகவல் கொடுத்தனர். அதிகாரிகள் வந்து பார்த்துவிட்டு சென்றதோடு சரி. மின்கம்பத்தை மாற்றுவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதுகுறித்து நகராட்சி துணைத்தலைவர் ஹாஜாமுகைதீன் கூறுகையில்,

அசம்பாவிதம் ஏற்படும் முன்பு, ராமநாதபுரம் உதவி செயற்பொறியாளர், உடனடியாக மின்கம்பத்தை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்Õ என்றார்

3 comments:

  1. அசம்பாவிதம் ஏற்படும் முன்பு, ராமநாதபுரம் உதவி செயற்பொறியாளர், உடனடியாக மின்கம்பத்தை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நகராட்சி துணைத்தலைவர் ஹாஜாமுகைதீன் என்று கீழக்கரை டைம்ஸ்-க்கு சொல்லி என்ன பயன். சொல்ல வேண்டிய இடத்தில் சொன்னாவுல கதை முடிவுக்கு வரும்.

    பாவப்பட்ட மின் கம்பம் நம்மளவிட மிக மோசமான நிலையிலே பலவிதமான சுமைகளைத் தாங்கி நிற்கிறது.

    ReplyDelete
  2. சவுக்கடி சாவன்னாJune 30, 2013 at 7:13 PM

    உணர்ச்சி அற்ற ஜென்மங்களுடன் முட்டி மோதி போராடுவதில் என்ன பயன்? பாரிய விளைவுகளை சந்திக்க மனதை திடப்படுத்திக் கொண்டு தயாராக வேண்டியது தான்.வேறு வழி? படைத்தவன் நம் அனைவரையும் காப்பானாக. ஆமீன்

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.