கீழக்கரையில் வீடு மற்றும் கடைகளுக்கு சமையல் கேஸ் சிலிண்டர் சப்ளை செய்யும் பணியை சேது கேஸ் ஏஜென்சி செய்து வருகிறது.இங்குள்ள காஸ் சிலிண்டர்களை இருப்பு வைப்பதற்கு காஞ்சிரங்குடி செல்லும் வழியில் குடோன் உள்ளது.
இங்கு நேற்று அடையாளம் தெரியாத மர்ம ஆசாமிகள் குடோன் பூட்டை உடைத்து 22 காலி சிலிண்டர்களை திருடி சென்றுள்ளனர்.
இது குறித்து கேஸ் ஏஜென்சி மேலாளர் வீரமணி கீழக்கரை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்ததை தொடந்து கீழக்கரை இன்ஸ்பெக்டர் கனேசன் தலைமயில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.