கீழக்கரை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியில் தேசிய பறவையான மயில்கள் சரணாலயம் அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கீழக்கரை,ஏர்வாடி,காஞ்சிரங்குடி ஆகிய பகுதிகளில் நூற்றுக்கணக்கான மயில்கள் சுற்றி திரிகின்றன. இவை வீடுகளோடு கூடிய தென்னந்தோப்புகளுக்கு வரும் போது அங்குள்ளோர் மயில்களுக்கு உணவு கொடுக்கின்றனர். மற்ற நேரங்களில் அப்பகுதியிலுள்ள புழு, பூச்சிகளை உண்டு வாழ்கின்றன.
பட விளக்கம்:கீழக்கரை அருகே தோட்டத்தில் நெருங்கி நிற்கும் மயில்
உணவு கிடைக்காத காலங்களில், அருகில் உள்ள வயல்களில் நெல்கதிர்களை சாப்பிடுகின்றன. உணவு தேடி சுற்றி திரியும் மயில்கள், உணவு கிடைக்குமிடங்களில் தங்கி விடுகின்றன.தற்போது இப்பகுதியில் நூற்றுக்கணக்கான மயில்கள் சுற்றி திரிகின்றனர். மயில்கள் அடர்ந்த மரங்கள் நிறைந்த பகுதிகளிலும்,தென்னந்தோப்பு பகுதிகளிலும்,வயல் வெளிகளிலும் அதிகம் காணமுடிகிறது.வீட்டு வளர்க்கும் கோழி,சேவலை போன்று சாதரணமாக சுற்றி திரிகிறது.
மேலும் சில நேரங்களில் உணவு தேடி மெயின் ரோட்டிற்கு வரும் மயில்களை, தெருநாய்கள் கடிக்கின்றன. சில மயில்கள் வாகனங்களில் அடிபட்டு இறக்கின்றன. மயில்களுக்கு பாதுகாப்பான இடம் இல்லை.கீழக்கரை,ஏர்வாடி,திருப்புல்லாணி பகுதிகளில் மயில்களை பாதுகாக்க சரணாலயம் அமைத்து பொழுது போக்கு தலமாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது குறித்து பறவை ஆர்வலர் ஹாஜா அலாவுதீன் கூறுகையில்,
சுதந்திரமாக சுற்றி திரியும் மயில்களுக்கு சரணாலயம் அமைப்பது சற்று கடினம்தன். ஏனெனில், ஒரு நாளைக்கு மயில்கள் பல கிலோமீட்டர்கள் எல்லையை பறந்து கடக்கவல்லது. எனவே அதனை சரணாலயத்துக்குள் முடக்குவது என்பது சாதாரணமான காரியம் அல்ல.ஆனாலும் அரசாங்கம் சோதனை முயற்சியாக இப்பகுதியில் சராணாலயம் அமைத்து மயில்களை காப்பாற்ற முயற்சி செய்ய வேண்டும்.
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.