கீழக்கரை நகர் நல இயக்கம்,வடக்குத்தெரு ஜமாத் நிர்வாக சபை மற்றும் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமன்னை இணைந்து நடத்திய புற்று நோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி வடக்குத்தெரு முஹைதீனியா மெட்ரிக் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
வடக்குத்தெரு ஜமாத் தலைவர் அக்பர்கான் தலைமை வகித்தார்.நகர் நல இயக்க நிறுவன ஹமீது அப்துல் காதர் ,தலைவர் செய்யது இப்ராகிம்,வடக்குதெரு ஜமாத் செயலாளர் தம்பி வாப்பா என்ற முகைதீன் இப்ராகிம் முன்னிலை வகித்தனர்.நகர் நல இயக்க செயலாளர் பசீர் அகமது வரவேற்றார்.
புற்றுநோய்க்கான சிறப்பு மருத்துவர் காசி விஸ்வநாதன்(மதுரை மீனாட்சி மிஷன்) புற்று நோய்க்கான அறிகுறிகள் மற்றும் புற்று நோய் வந்தால் அதை எப்படி போக்குவது குறித்து விளக்கமாக பேசினார்.நகர் நல இயக்கத்தின் பொருளாளர் ஹாஜா நன்றி கூறினார்.
இதில் வடக்குத்தெரு ஜமாத் துணை தலைவர் ஜாஹிர் ஹுசைன் மற்று ஜமாத்தார்கள் ,யூசுப் சுலைகா மருத்துவமனை இயக்குநர் டாக்டர் செய்யது அப்துல் காதர்,பெண்கள் உள்பட ஏராளாமானோர் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வடக்குத்தெரு நாசா சமூக நல அமைப்பினர் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
கீழக்கரை நகர் நல இயக்கம் சில மாதங்களுக்கு முன் கீழக்கரை சுகாதார பிரச்சனையை "ஜீ" டிவியில் "சொல்வதெல்லாம் உண்மை" நிகழ்ச்சியில் எடுத்துரைத்தது குறிப்பிடதக்கது.

No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.