ராமநாதபுரம் மாவட்டத்தில் "கருப்பு தங்கம்" என்றழைக்கப்படும் நிலக்கரி இருப்பதாக தெரியவந்ததையடுத்து நிலக்கரியில் இருந்து மின் உற்பத்தியின் திறனை அதிகரிக்கும் நடவடிக்கையாக கீழக்கரை, சாயல்குடி, உத்தரகோசமங்கை, வன்னிவயல், நயினார் கோயில் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வுப் பணிகள் நடைபெற்றது. நடத்தப்பட்ட முதல் ஆய்வில், நிலக்கரி கிடைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக தெரியவந்தது.
இதை தொடர்ந்து, எம்.இ.சி.எல்., கீழக்கரை திட்ட பிரிவின் மேலாளர் கோட்ட புல்லையா தலைமையில், 2010 நவம்பர் முதல், கீழக்கரையில் முகாமிட்டு, நிலக்கரி ஆய்வுப் பணியை மேற்கொண்டனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் 118 சதுர கி.மீ., க்கு பல்வேறு கிராமங்களில் ஆழ்குழாய் உதவியுடன் நிலக்கரி ஆய்வுப் பணிகள் நடந்து முடிந்துள்ளது.
இந்தியாவில் நிலக்கரியில் இருந்து மின் உற்பத்தியின் திறனை அதிகரிக்கும் நடவடிக்கையாக, பல மாநிலங்களில், மத்திய அரசின் இந்திய தாதுக்கள் வெளிக்கோணரும் கழகத்தினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்
எம்.இ.சி.எல்., அதிகாரி ஓருவர் கூறியதாவது: ராமநாதபுரம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு அறிக்கை, டெல்லி அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. அங்குள்ள நிபுணர்களின் ஆய்வுக்கு பின், பூமிக்கடியில் நிலக்கரியின் அளவு கண்டறியப்படும். அதிகளவில் கிடைக்கும் வாய்ப்பு இருந்தால் மட்டுமே, அடுத்தக்கட்ட பணி துவங்கும்.இதற்கிடையே கும்பகோணம் பகுதியில், ஆய்வுக்கான உத்தரவு வந்துள்ளது. ஆய்வு பணி மேற்கொள்ள அங்கு செல்கிறோம், என்றார்.
இதற்கு முன் வறட்சி மாவட்டமான ராமநாதபுரத்தின் வழுதூர், கழுகூரணி உள்ளிட்ட பகுதிகளில் சில ஆண்டுகளுக்கு முன்பு இயற்கை எரிவாயு கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது
இப்பகுதிகளில் நிலக்கரி இருப்பு உறுதி செய்யப்பட்டு பணிகள் துவங்குமானால் இம்மாவட்டம் வளம் கொழிக்கும் மாவட்டமாக மாறும் என சமூக நல ஆர்வலர்கள் கருதுகின்றனர்.
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.