கீழக்கரை கிழக்கு தெருவில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் வடிகால் வாய்க்கால் கட்டுவதற்கு நகராட்சி சார்பில் முகம்மதுகாசிம் அப்பா தர்ஹா செல்லும் வழியில் பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால் இந்த பகுதியில் வாய்க்கால் தேவை இல்லை என்று அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பணி நிறுத்தப்பட்டது. ஆனால் அந்த பணிக்கு தோண்டப்பட்ட பள்ளத்தை மூடவில்லை. இதனால் மக்கள் நடமாடுவதற்கும், பள்ளி வாகனங்கள் குழந்தைகளை ஏற்றச் செல்வதற்கும் குடி தண்ணீர் லாரி செல்வதற்கும் மிகவும் சிரமம் ஏற்பட்டது.
இந்நிலையில் நகராட்சி தலைவர் ராவியத்துல்கதரியாவின் அனுமதிபெற்று எஸ்.டி.பி.ஐ. மாவட்ட தொகுதி துணைத்தலைவர் அப்பாஸ் ஆலிம் தலைமையில் நகர் தலைவர் காதர், செயலாளர் அப்துல்ஹாதி முன்னிலையில் செயல்வீரர்கள் ஒன்று சேர்ந்து மண்வெட்டி பிடித்து அந்த பள்ளத்தை மூடினர்.
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.