Thursday, December 27, 2012

கீழக்கரை நகராட்சி கூட்டம் ஒத்திவைப்பு! அதிமுக‌ க‌வுன்சில‌ர் 3 பேர் உள்ளிட்ட‌ 10பேர் வெளிந‌ட‌ப்பு!

ப‌ழைய‌ ப‌ட‌ம்

கீழக்கரை நகராட்சி கூட்டத்தின் போது அதிமுக கவுன்சிலர்கள் மூன்றுபேர் உள்பட 10 பேர் வெளிநடப்பு செய்த தால் கூட்டத்தை நகராட்சி தலைவர் ஒத்தி வைத்தார்.
கீழக்கரை நகராட்சி கூட்டம் நேற்று காலை கீழக்கரை நகராட்சி கூட்டரங்கில் நடைபெற்றது. தலைவர் ராவியத்துல்கதரியா தலைமை வகித்தார். துணைத்தலைவர் ஹாஜாமுகைதீன் கமிஷனர் முகம் மது முகைதீன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மொத்தம் 39 தீர்மானங்கள் வைக்கப்பட்டன. இதில் 6 தீர்மானங்கள் படிக்கப்பட்டது.

7வது தீர்மான பொருளை படிக்க ஆரம்பிக்கும்போது, 15வது வார்டு கவுன்சிலர் மஜீதாபீவி, எனது வார்டில் தெரு விளக்குகள் எரிவதில்லை, பலமுறை புகார் தெரிவித்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை, எனது வார்டு புறக்கணிக்கப்படுகிறது எனக் கூறி வெளிநடப்பு செய்தார்.

தொடர்ந்து 11வது வார்டு கவுன்சிலர் மீராபானு 12வது வார்டு கவுன்சிலர் சித்தீக்அலி, 13வது வார்டு ரபியுதீன், 19வது வார்டுஅருஸியாபேகம், 20வது வார்டு ஹாஜா நஜிமுதீன், 16வது வார்டு ஜரினாபீவி(அதிமுக), 17வது வார்டு முகைதீன்காதர்சாகிபு (அதிமுக), 8வது வார்டு பாவா செய்யதுகருணை(அதிமுக), 3வதுவார்டு ரமேஷ் ஆகியோரும் வெளிநடப்பு செய்தனர்.

அவர்கள் கூறுகையில், ‘ஏற்கனவே டென்டர்விட்ட திட்டபணிகள் அனைத்தும் தரமான முறையில் நடைபெறவில்லை. இந்நிலையில் டெண்டர் என்ற பெயரில் தாங்களாவே பேசி முடிவு செய்து முறைப்படி டெண் டர் பெட்டி வைக்காமல் தீர்மானத்திற்கு கொண்டு வந்துள்ளீர்கள். இந்த தீர்மானங்களை எதிர்த்து வெளிநடப்பு செய்கிறோம்’ என்றனர்.

21 கவுன்சிலரில் 13 கவுன்சிலர்களே கூட்டத்திற்கு வந்திருந்தனர். அதில் 10 பேர் வெளிநடப்பு செய்ததால் 3 பேர் மட்டுமே கூட்டரங்கில் இருந்தனர். இதனால் கூட்டத்தை ஒத்திவைப்பதாக தலைவர் அறிவித்தார்.
 

1 comment:

  1. மங்காத்தாவின் தங்கச்சி மகன்December 27, 2012 at 7:45 PM

    என்னமோ நினைத்தோம். என்னமோ நடந்து கொண்டிருக்கிறது.. ஆளும் கட்சி மக்கள் பிரதிநிதிகளிடையே உள் குத்து வேலை, சேம் ஸைடு கோல்.. பாழாய் போன தமிழக அரசு சட்டத்தால் ஒரு பெண்ணை தலைவராக தேர்ந்தெடுக்கூடிய கட்டாயத்திற்கு ஆட்பட்டோம். இதன் பயனாக அதிகம் பேசமுடியவில்லை. அது அவர்களுக்கு சாதகமாகிக் கொண்டு இருக்கிறது..வெட்கக் கேடு..இந்த பதவி தேவைதானா????? யோசித்து நல்ல முடிவு காணட்டும்..

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.