Sunday, December 23, 2012

கீழக்கரை மகளிர் கல்லூரிக்கு ச‌ர்வ‌தேச‌(ஐஎஸ்ஓ) தரச் சான்றிதழ்

photo by tbakcw

கீழக்கரை தாசிம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரி வெள்ளிவிழா ஆண்டான நடப்பாண்டில் ( International Organization for Standardization )சர்வதேச தரக்குழுவினரின் தரச்சான்று பெற்றுள்ளது.

இதுகுறித்து கல்லூரி முதல்வர் சுமையா கூறுகையில்,

‘சர்வதேச வலையமைப்பு மற்றும் ஆஸ்திரிய தரச் சான்றிதழ் அமைப்பு குழுவினர் கல்லூரிக்கு வ‌ருகை த‌ந்த‌ன‌ர். கல்லூரியின் இளங்கலை மற்றும் முதுகலை வகுப்புகளுக்குரிய பாடத்திட்டம் வடிவமைத்தல் மற்றும் பட்டம் வழங்குதலையும், ஆராய்ச்சி திட்டங்களையும் ஆய்வு செய்தனர்.
மேலும் சான்றிதழ் மற்றும் பட்டய படிப்பு மேம்பட்ட பட்டயம் முதுநிலை பட்டய படிப்புகளுக்குரிய கலை அறிவியல், மனிதநேயம் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த வகுப்புகளுக்குரிய பாடத்திட்டம் செயல்படுத்தி பராமரிக்கப்பட்டு வருவதையும் ஆய்வு செய்தனர். இதையடுத்து கல்லு�ரியின் வெள்ளிவிழா ஆண்டான நடப்பாண்டிலேயே ஐ.எஸ்.ஓ. 9001&2008 சான்றிதழ் வழங்கியுள்ளனர்’ என்றார்.
 

1 comment:

  1. மங்காத்தாவின் தங்கச்சி மகன்December 23, 2012 at 1:11 PM

    இதயம் கனிந்த நல்வாழ்த்துகள். மேன்மேலும் சிறப்படைய வல்ல ரஹ்மானிடத்தில் பிரார்த்திக்கின்றோம்..

    இந்த இனிய நேரத்தில் வேதனையோடு ஒரு செய்தியை நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறோம்..

    கடந்த மூன்று வருட காலத்தில் கீழக்கரையில் நடந்த திருமணங்களில் கணிசமான அளவு விவாகரத்தில் முடிந்துள்ளது என் அறிய நேரும் போது மனம் வலிக்கிறது / அழுகிறது.. இதில் அநேகர் கல்லூரியில் படித்தவர்கள்.இதில் நிச்சயமாக, உறுதியாக உங்களை குறை காண வில்லை.இருப்பினும் பாடத் திட்டத்தை கடந்து சிறிது நேரமாவது ஒழுக்க நடைமுறைகளை, வாழ்க்கை நெறிமுறைகளை கற்று தருவதில் தொய்வு உள்ளதோ என்பதில் அச்சமாக உள்ளது.. மாதா, பிதாவுக்கு அடுத்த ஸ்தானத்தில் உள்ள நீங்கள் முயற்சி செய்தால் நலம் பயக்குமே எனபது தான் எங்கள் ஆதங்கம். மற்றப்படி விதிக்கப்பட்டது தான் நடக்கும் என பொறுமை கொள்ள வேண்டியது தான்.

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.