Monday, December 3, 2012

கீழக்கரையில் மீன் விலை வீழ்ச்சி


கீழக்கரையில் பழைய மீன் மார்க்கெட், புதிய மீன்மார்க்கெட் என இரண்டு மீன்மார்க்கெட்டுகள் உள்ளன. இங்கு நேற்று முன்தினம் முதல் மீன்களின் விலை மிகவும் குறைந்திருந்தது. இதனால் பொது மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

கீழக்கரையில் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள புதிய மீன்மார்க்கெட்டில் தொடர்ந்து மீன்வரத்து அதிகரித்துள்ளதால் மீன் மற்றும் இறால் விலை மிகவும் வீழ்ச்சியடைந்துள்ளது.

சாதாரணமாக கிலோ ரூ.150 முதல் 200க்கு விற்பனையாகும் ஓரா மீன்கள் நேற்று ரூ.130க்கும், ரூ.250க்கு விற்பனையாகும் வாளை மீன், ஊடகம், குதிப்பு, வௌ மீன் போன்ற மீன்கள், ரூ.120க்கும், ரூ.300 முதல் 400க்கு விற்பனையாகும் இறால் ரூ.160க்கும் விற்பனையானது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் அதிகளவு மீன்களை வாங்கிச் சென்றனர்.

இதுகுறித்து மீன் வியாபாரம் செய்யும் நாகலெட்சுமி கூறுகையில், ‘தற்போது தொடர்ந்து மீன் மற்றும் இறால் வரத்து அதிகரித்திருப்பதால் விலை குறைவாக விற்பனை செய்கிறோம்’ என்றார்.

1 comment:

  1. December la yaethiduvaanga................ puyal varuvatharku munnaal varum amaithi thaan ithu :)

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.