Monday, December 24, 2012

ம‌க்க‌ள் ந‌ல ப‌ணிக‌ளுக்கு இடையூறு!ரோட்ட‌ரி ச‌ங்க த‌லைவ‌ர் ஆசாத் புகார்!



நாடு முழுவ‌தும் போலியோ ஒழிப்பை தீவிரப்ப‌டுத்தி போலியோ இல்லாத இந்தியாவாக‌ திக‌ழ‌ அரசாங்க‌ம் ம‌ற்றும் பொதும‌க்க‌ளின் ஒத்துழைப்போடு எடுத்த‌ முய‌ற்சி வெற்றியை நெருங்கி விட்ட‌ நிலையில் போலியோவை அடியோடு அக‌ற்றி அற‌வே இல்லாம‌ல் ஆக்க‌ ரோட்டரி ச‌ங்க‌ம் உள்ளிட்ட‌ ச‌மூக‌ நல‌ அமைப்புகளின் உத‌வியோடு ஏராள‌மான‌ போலியோ ஒழிப்பு முகாம்க‌ள் நடைபெற‌ உள்ள‌து.

நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் வரும் ஜனவரி 20, பிப்ரவரி 24ம் தேதிகளில் நடக்கிறது. முகாமில் 5 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ரோட்டரி இன்டர்நேஷனல் மாவட்டம் 3212 சார்பில் நேற்று நெல்லையில் போலியோ ஒழிப்பு பயிற்சி பட்டறை நடந்தது. ரோட்டரி சங்க தலைவர் ரமணி தலைமை வகித்தார். செயலாளர் அரிகிருஷ்ணன், துணை கவர்னர் டால்டன் முன்னிலை வகித்தனர். மாவட்ட கவர்னர் ஷாஜகான், அசோக் பத்மராஜ், தேசிய போலியோ ஒழிப்பு கண்காணிப்புக்குழு ஒருங்கிணைப்பாளர் கமாலுதீன், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் உமா, டாக்டர் பிரதாப்சந்திரன், போலியோ திட்ட தலைவர் டாக்டர் விஜயகுமார் உட்பட பலர் பேசினர்.
நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களை சேர்ந்த ரோட்டரி சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஒரு குழந்தை கூட விடுபடாமல் போலியோ முகாமில் சொட்டு மருந்து வழங்குவது, போலியோ முகாம் தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துவது குறித்து ஆலோசனை நடந்தது.


இது குறித்து கீழக்கரை ரோட்டரி சங்க தலைவர் ஆசாத் கூறுகையில்,

கீழ‌க்க‌ரை ந‌க‌ர் முழுவ‌தும் ஜ‌னவ‌ரி20 ம‌ற்றும் பிப் 24ல் போலியோ சொட்டு ம‌ருந்து முகாம்க‌ள் ந‌டைபெற‌ உள்ள‌து.வீடு வீடாக‌ சென்றும் போலியோ சொட்டு ம‌ருந்து கொடுக்க‌ உள்ளோம்.பொதும‌க்க‌ள் அனைவ‌ரும் போலியோவை ஒழிக்க‌ முழு ஒத்துழைப்பு த‌ர‌ வேண்டும்.

மேலும் ம‌க்க‌ள் அறிந்து கொள்ள‌ வேண்டும் என்ப‌த‌ற்காக‌ போலியோ ஒழிப்பு தொட‌ர்பாக‌  விள‌ம்ப‌ர‌ போர்டுக‌ளை வைத்துள்ளோம்.மெயின் ரோடில் குறிப்பிட்ட‌ இட‌த்தில் சாலையோர‌ம் போலியோ ஒழிப்பு விள‌ம்ப‌ர‌ போர்டு வைப்ப‌த‌ற்கு அர‌சிய‌ல் க‌ட்சியில் உள்ள‌ உள்ளூரை சேர்ந்த‌ ஒருவ‌ர் இடையூறு செய்கிறார்.எத்த‌னையோ வியாபார‌,அர‌சிய‌ல் போர்டுக‌ள் வைக்க‌ப்ப‌டுகின்ற‌ன‌ அத‌ற்கெல்லாம் இடையூறு இல்லை ம‌க்க‌ளின் ந‌ல‌னிற்க்காக‌ வைக்க‌ப்ப‌டும் போர்டை  வைக்க‌ கூடாது என‌ இடையூறு செய்கின்ற‌ன‌ர்.ம‌ன‌துக்கு மிக‌வும் வேத‌னையாக‌ உள்ள‌து.

போர்டை அக‌ற்ற‌ முடியாது என‌ கூறி விட்டோம் அத‌ற்கு மேலும் இடையூறு செய்தால் ச‌ட்ட‌ப்ப‌டி ச‌ந்திப்போம் என‌வே த‌ய‌து செய்து இது போன்ற‌ ம‌க்க‌ள் ந‌ல‌ ப‌ணிக‌ளை இடையூறு செய்யாதீர்க‌ள் என‌ வ‌லியுறுத்தி கேட்டு கொள்கிறேன் என்றார்.

1 comment:

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.