கீழக்கரை அஹமது தெரு பொது நலச்சங்கத்தின் அமீரகக் கிளையின் ஒன்பதாவது பொதுக்கூட்டம் கடந்த 30/11/2012 வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில் துபாயில் தேராவிலுள்ள ஈடியே டி பிளாக் வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு அஸ்வான் அமைப்பின் தலைவர் ஹமீது கான் தலைமை வகித்தார். கிராத்துடன் துவங்கிய நிகழ்வில் செயலாளர் ஹமீது ரஹ்மான் வரவேற்புரையில் சந்தா சேர்ப்பது,மற்றும் வருங்காலங்களில் நலப்பணிகளை செயல்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களை விளக்கி உரையாற்றினார்
தொடர்ந்து, இணை செயலாளர் கீழை ராஸா மற்றும் துணை செயலாளர்கள் சீனி இப்ராகிம் ,இலியாஸ் அஹமதுஆகியோர் அஸ்வான் அமைப்பின் சார்பில் நடைபெற்ற,நடைபெற உள்ள பல்வேறு நலப்பணிகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தனர். மேலும் வரவு செலவு மற்றும் சந்தா தொடர்பாக உப தலைவர் முஸம்மில் கனியுயின் உரையைத் தொடர்ந்து ஆலோசகர் முஹம்மது இப்னு அமைப்பின் சீரான பல் வேறு யோசனைகளை வழங்கினார்
தெருவாசிகளின் கல்வி ,சுகாதார மேம்பாடு,தெரு, மற்றும் மதரஸா வளர்ச்சி தொடர்பான செயல்பாடு உள்ளிட்ட பல் வேறு கருத்துக்கள் பறிமாறப்பட்டதுடன் ஊர் நலன் தொடர்பான பல விசயங்களும் கலந்துரையாடப்பட்டது.
தொடர்ச்சியாக ”சங்கமம்” என்ற பெயரில் நபிமொழிகள் மற்றும் நல்லுபதேசம் போதிக்கும் வகையிலான அஸ்வான் செய்திமடல் தொடர்பாக கிழைராஸா வடிவமைத்த அஸ்வான் லோகோ மற்றும் சங்கமம்-அஸ்வான் செய்திமடலின் வடிவமைப்பு அனைவராலும் ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட இந்த முஹர்ரம் முதலே மாதம் மாதம் அஸ்வான் செய்திமடல் வெளியிடுவதற்கான ஆலோசனையும் மேற்கொள்ளப்பட்டது.
நிகழ்வின் இறுதியாக துணைத்தலைவர் ஜாஹிர் ருக்முதீனின் நன்றியுரையைத் தொடர்ந்து, தலைவர் ஹமீதுகான் அவர்களின் துவாவுடன் கூட்டம் இனிதே நிறைவுற்றது
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.