Wednesday, December 26, 2012

ராம‌நாத‌புர‌த்தில் மீண்டும் போட்டியிட்டால் டெபாசிட் இழ‌ப்பார்!கீழ‌க்க‌ரை முஜீப் பேட்டி!

பைல் (ப‌ழைய‌)ப‌ட‌ம்
 
கீழ‌க்க‌ரையை சேர்ந்த‌ முஜீப் த‌முமுக‌ மற்றும் ம‌ம‌கவில் மாவ‌ட்ட‌ பொறுப்பிலும்,கீழ‌க்க‌ரை ந‌க‌ர் பொறுப்பிலும் ப‌ணியாற்றி பின்ன‌ர் நீண்ட‌ கால‌த்திற்கு முன் அக்க‌ட்சியிலிருந்து நீக்க‌ப்ப‌ட்டார்.இவ‌ர் த‌ற்போது கீழ‌க்க‌ரையில் ச‌மூக‌ ந‌ல‌ அமைப்பை துவ‌ங்கி செய‌லாற்றி வ‌ருகிறார்.
கீழ‌க்க‌ரை முஜீப் கூறிய‌தாவ‌து,

ராம‌நாத‌புர‌ம் தொகுதி ச‌ட்டம‌ன்ற‌ உறுப்பின‌ராக‌ உள்ள‌ பேரா.ஜ‌வாஹிருல்லாஹ்.எம்.எல்.ஏ அவ‌ர்க‌ள் தேர்த‌ல் ச‌ம‌ய‌த்தில் கொடுத்த‌ வாக்குறுதிக‌ளை நிறைவேற்ற‌வில்லை என‌வே இனி ஒரு முறை ராமநாதபுர‌ம் தொகுதியில் போட்டியிட்டால் டெபாசிர் இழ‌ப்பார்.
மேலும் அவ‌ர் கூறிய‌தாவ‌து,

தான் வெற்றிபெற்றால் கீழ‌க்க‌ரை பாதாள‌ சாக்க‌டை திட்ட‌த்தை நிறைவேற்றுவேன் என்றார் வ‌ருட‌ம் ஒன்றுக்கு மேலாகி விட்ட‌து.எவ்வித‌ முய‌ற்சியும் இல்லை.

கீழ‌க்க‌ரையில் ஏராள‌மானோர் டெங்குவால் பாதிக்க‌ப்ப
‌ட்டு ப‌ல‌ர் உயிரையும் விட்ட‌ன‌ர்.ச‌ட்ட‌ம‌ன்ற‌ உறுப்பின‌ர் என்ற‌ முறையில் என்ன‌ நட‌வ‌டிக்கை எடுத்தார்?

திமுக‌ ஆட்சியில் கீழ‌க்க‌ரை த‌னி தாலுகாவாக‌ அறிவிக்க‌ப்ப‌ட்டு வ‌ருட‌ங்க‌ளை க‌ட‌ந்து விட்ட‌து.ஏன் இன்னும் செயல்ப‌டுத்த‌ முய‌ற்சி எடுக்க‌வில்லை.

ராமநாத‌புர‌த்தில் ஆயிர‌க்க‌ண‌க்கான‌வ‌ர்க‌ள் மீன் பிடி தொழிலில் ஈடுப‌டுகின்ற‌ன‌ர்.இவ‌ர்க‌ளில் சில‌ர் க‌ட‌ல் அட்டையை க‌ட‌த்துகிறார்க‌ள் என்று கைது செய்ய‌ப்ப‌டுகிறார்க‌ள்.ஜ‌வாஹிருல்லா அவ‌ர்க‌ள் தேர்த‌ல் ச‌ம‌ய‌த்தில் "நான் வெற்றி பெற்று கட‌ல் அட்டை த‌டையை நீக்குவேன்" என்று வாக்குறுதி கொடுத்தார் ..செய்தாரா? குறைந்த‌ப‌ட்ச‌ம் காவ‌ல்துறையால் கட‌ல்அட்டையை கட‌த்தின‌ர்க‌ள் என்று கைது செய்ய‌ப்படும் மீன‌வர்க‌ளுக்கா குர‌ல் கொடுத்தாரா?
இன்னும் வ‌ரிசையாக‌ அடுக்கி சொல்ல முடியும்

முன்னாள் எம்.எல்.ஏ ஹ‌ச‌ன் அலி எவ்வ‌ளோவோ ப‌ரவாயில்லை என்று ம‌க்க‌ள் பேசும‌ள‌வுக்கு ஜ‌வாஹிருல்லாஹ் அவ‌ர்க‌ளின் நிலை உள்ள‌து

மக்க‌ளுக்காக‌ உழைப்பார் என‌ என‌ ந‌ம்பி அவ‌ருக்காக‌ தேர்த‌லில் உழைத்தோம்.எங்க‌ளை போன்ற‌ தொண்ட‌ர்க‌ள் உழைப்பில் கீழ‌க்க‌ரையில் ம‌ட்டும் 5 ஆயிர‌த்திற்கு மேற்ப‌ட்ட‌ வாக்குக‌ளை ஜவாஹிருல்லாஹ் பெற்றார்க‌ள்.அனைத்தும் விழ‌லுக்கு இரைத்த‌ நீராகி விட்ட‌து.மீண்டும் ஜ‌வாஹிருல்லாஹ் அவ‌ர்க‌ள் ராம‌நாத‌புர‌ம் தொகுதியில் போட்டியிடுவாரானால் டெபாசிட் இழ‌ப்பார் என்ப‌தை உறுதியாக‌ கூறுகிறேன்.
இனி வ‌ரும் கால‌ங்க‌ளிலாவ‌து அவர் தேர்த‌லில் கொடுத்த‌ வாக்குறுதிக‌ளை நிறைவேற்ற‌ வேண்டும் என்றார்.
 

8 comments:

 1. கண்களை மூடிக்கொண்டு இருந்தால் உலகம் இருட்டாகத்தான்ம தெரியும், பேரசிரியரின் சுற்றுப் பயண்ம் உங்களுககு தெரியவில்லையா? சமிபத்தில் தனது தொகுதிக்குட்பட்ட ஊர்களில் பணிகளை ஆய்வு நடத்தியது தெரியதா?

  ReplyDelete
 2. 3178. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
  நான்கு குணங்கள் எவனிடம் குடிகொண்டுள்ளனவோ அவன் வடிகட்டிய நயவஞ்சகன் ஆவான். பேசும்போது பொய் சொல்வதும், வாக்குறுதியளித்தால் (அதற்கு) மாறு செய்வதும், ஒப்பந்தம் செய்தால் (நம்பிக்கை) மோசடி செய்வதும், வழக்காடினால் அவமதிப்பதும் தான் அவை. எவனிடம் இவற்றில் ஒரு குணம் குடிகொண்டுள்ளதோ அவன் அதைவிட்டுவிடும் வரை அவனுள் நயவஞ்சகத்தின் ஒரு குணம் குடியிருக்கும்.
  என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்

  ReplyDelete
 3. கேப்டன் தொலைக்காட்ச்சியில் கண்ணியமிகு பேராசிரியர் முனைவர் எம் ஹெச் ஜவாஹிருல்லாஹ் சிறப்பு பேட்டி

  http://www.facebook.com/photo.php?v=504284729604179

  ReplyDelete
 4. கேப்டன் தொலைக்காட்ச்சியில் கண்ணியமிகு பேராசிரியர் முனைவர் எம் ஹெச் ஜவாஹிருல்லாஹ் சிறப்பு பேட்டி

  http://www.facebook.com/photo.php?v=504284729604179

  ReplyDelete
 5. கண்ணியமிகு என்பதை ஜவாஹிருல்லா அவர்களுக்கு எப்படி மனம் வந்து எழூதுகின்றிர்கள் அந்த வார்த்தை கண்ணியத்திற்குறிய காயிதேமில்லத் அவர்களை மட்டுமே சாரும் என்பதை அறிவுஜிவிகளுக்கு தெரிவித்துகொள்கிறோன்

  ReplyDelete
 6. கண்ணியமிகு என்ற வார்த்தை ஜவாஹிருல்லா அவர்களுக்கு இல்லை அந்த வார்த்தை காயிதேமில்லத் (ரஹ்) அவர்ளையே சாரும்

  ReplyDelete
 7. முஜீப் காக்கா அவர்கள் சொன்னது போல் பல விதமான வாய் ஜாலங்களை எல்லாம் காட்டி ஓட்டை பெற்று கோட்டைக்கு சென்றவுடன் வழக்கம் போலவே இவரின் வேலையை பழைய சட்டமன்ற உறுப்பினர்களை போன்று காட்டிவிட்டார். நம்ம ஹசன் அலி காக்கா தொகுதி பக்கம் வருவதில்லை என்று சொல்லிவிட்டு நான் இராமனாதபுரத்திலேயே வீடு பிடித்து தங்குவேன் என்று சொல்லிவிட்டு அதை நிறைவேற்றினாரா? இது ஒன்று போதாதா அதை விடுத்து அதை செய்தேன் இதை செய்தேன் என்று அளந்து விட வேண்டிய அவசியமென்ன?

  ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.