




பொதுச்செயலாளர் குத்தாலம் அல்ஹாஜ் ஏ.லியாக்கத் அலி வரவேற்புரை நிகழ்த்தினார். சிறப்பு விருந்தினராக சாத்தான்குளம் அப்துல் ஜப்பார் கலந்து கொண்டு வாழ்த்துப்பா பாடினார். ஈமான் அமைப்பின் சார்பில் நினைவுப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
ஈமான் அமைப்பின் புரவலர்கள் ஆலியா முஹம்மது டிரேடிங்க் நிர்வாக இயக்குநர் அல்ஹாஜ் ஷேக் தாவூது, அரேபியன் ஹோல்டிங் குழும பொது மேலாளர் ரவூஃப் அலி ஆகியோர் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் கீழக்கரையை சேர்ந்த ஆதில்,முஜம்மில் உள்ளிட்ட வெற்றி பெற்ற பலருக்கு பரிசுகளை வழங்கினார்






முதல் மற்றும் சிறப்புப் பரிசாக 32 இஞ்ச் கலர் டிவிக்கள் பரிசாக வழங்கப்பட்டது.
மேலும் அதிஷ்டப் பரிசுகளும் வழங்கப்பட்டன. நிகழ்வினை துணைப் பொதுச்செயலாளர் ஏ.முஹம்மது தாஹா தொகுத்து வழங்கினார். நிகழ்வில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்விற்கான அணுசரனையினை ஈடிஏ அஸ்கான் குரூப், அரேபியா ஹோல்டிங்ஸ், ஆலியா முஹம்மது டிரேடிங், நூர் முஹம்மது அன் சன்ஸ், பாய்ண்ட் காலிமர் ஸ்கூல், அப்கிரேட் டயர்ஸ், ஆர்பிட் எக்ஸ்பிரஸ், பிளாக் துலிப் பிளவர்ஸ் உள்ளிட்ட பல நிறுவனங்கள் வழங்கியிருந்தன.
விழாவிற்கான ஏற்பாடுகளை ஊடகத்துறை செயலாளர் முதுவை ஹிதாயத்,விழாக்குழு செயலாளர் ஹமீது யாசின், ஜமால் முஹ்யித்தீன், காதர், ஃபைஜுர், மைதீன், இலியாஸ், சாகுல் ஹமீது, சாதிக், பஷீர், அப்துல் ரசாக், சர்புதீன், ஜாஹிர், கியாதுதீன், நிஜாம் அக்பர் மற்றும் நிர்வாகக் குழுவினர் செய்திருந்தனர்
.
.
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.