கீழக்கரை புதிய இன்ஸ்பெக்டராக கனேசன் பொறுப்பேற்ற பிறகு காவல்துறையின் நடவடிக்கைகளின் பேரில் கீழக்கரையில் கஞ்சா விற்பனை,மது விற்பனை என பல்வேறு சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படும் பலர் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கீழக்கரை வாணியர் தெருவைச் சேர்ந்த கருப்புச்சாமி மகன் கென்னடி(42). சண்முகம் மகன் தியாகராஜன்(62) ஆகியோர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், காவல் ஆய்வாளர் கணேசன், உதவி ஆய்வாளர் கோபால் மற்றும் போலீசார் கென்னடி, தியாகராஜன் ஆகியோரை கைது செய்தனர். அவர்கள் வைத்திருந்த லாட்டரி சீட்டுக்கான டோக்கன்களையும் ரூ9300-ஐயும் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.
தொடர் விசாரணையின் பேரில் லாட்டரி உரிமையாளர்கள் என கூறப்படும் சங்குதுரை,முத்து ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.