Friday, July 5, 2013

கீழக்கரை ஹமீதியா மெட்ரிக் பள்ளியின் 38வது விளையாட்டு விழா!




கீழக்கரை உஸ்வதுன் ஹசனா முஸ்லீம் சங்கத்தின் கீழ் செயல்படும் ஹமீதியா மெட்ரிக் பள்ளியின் 38வது விளையாட்டு விழா பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் ஆண்கள்,பெண்கள் என இரண்டு நாட்கள் நடைபெற்றது.

நிகழ்ச்சியின் முதல் நாள் சுலைஹா கலீல் தலைமை ஏற்று தேசிய கொடியை ஏற்றி பரிசுகளை வழங்கினார்.

இரண்டாம் நாள் கீழக்கரை டி எஸ் பி சோம சேகர் தலைமை ஏற்று வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசுகளை வழங்கினார்

பள்ளி தாளாளர் ஹமீது அப்துல் காதர் வரவேற்றார்.பள்ளியின் முதல்வர் ஸஹர் பானு முன்னிலை வகித்தார்.

யூசுப் சுலைஹா மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் செய்யது அப்துல் காதர் ஒலிம்பிக் கொடியையும் ,பைத்துல்மால் செயலாளர் பள்ளி கொடியையும், ஏற்றி வைத்தனர். விளையாட்டு போட்டிகளும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.உடற்கல்வி இயக்குநர் அப்பாஸ் நன்றி கூறினார்

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.