Wednesday, July 10, 2013

ஐக்கிய அரபு அமீரகத்தில் ரமலான் மாத நோன்பு துவக்கம்!


துபாய் தேரா பகுதியில் டி "பிளாக்" வளாகத்தில் தராவீஹ் எனப்படும் இரவு சிறப்புத் தொழுகையில் கீழக்கரை மற்றும் பல்வேறு ஊர்களை சேர்ந்த மக்கள் பங்கேற்றனர்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் பிறை கமிட்டியினரிடமிருந்து  ரமலான் மாத துவக்கத்திற்கான  அறிவிப்பு வெளியானது.இதனை தொடர்ந்து 10/07/2013 புதன்கிழமை முதல் நோன்பு துவங்கியது.

ரமலான் மாதம் துவக்கத்தையடுத்து துபாயிலும், ஐக்கிய அரபு அமீரகத்தின் பிற பகுதிகளிலும்  தராவீஹ் எனப்படும் இரவு சிறப்புத் தொழுகை பள்ளிகளில் தொழவைக்கப்பட்டது.

ரமலான் மாதத்தையட்டி வேலை நேரம் எட்டு மணியிலிருந்து ஆறு மணி நேரமாக அரசுத் துறைகளிலும் தனியார் துறைகளிலும் குறைக்கப்பட்டுள்ளது.
நோன்பு திறப்பதற்கு அரசு சார்பிலும், தொண்டு நிறுவனங்களின் சார்பிலும்

அமீரகத்தின் பல்வேறு பகுதிகளிலும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. துபாயில் தமிழக சமுதாய அமைப்பான இந்தியன் முஸ்லிம் அசோஷியேஷன் ( ஈமான் ) சார்பில் ரமலான் மாதம் முழுவதும் தினமும் ஐயாயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு  தமிழத்து கஞ்சியோடு  இப்தார் நிறைவு செய்வதற்கான ஏற்பாடுகள்  செய்யப்பட்டுள்ளது
 

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.