Thursday, July 18, 2013

ராக்கிங் தடுப்பது குறித்து விழிப்புணர்வு கூட்டம்!



கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ராக்கிங் தடுப்பு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் அபுல்ஹசன்சாதலி தலைமை வகித்தார்,

 மாயாகுளம் ஊராட்சி தலைவர் சுந்தராஜன், ஏர்வாடி போலீஸ் எஸ்ஐ ஆனந்தன், ஷேடோ சுயஉதவிக்குழு உதவி தலைவி உமா மகேஸ்வரி, ஷேடோ தொண்டு நிறுவன உதவி தலைவர் ஆரோக்கிய ராஜ் முன்னிலை வகித்தனர். முன்னதாக மாணவர் அஸ்லாம் கிராஅத் ஓதி துவக்கி வைத்தார். பேராசிரியர் பாலகிருஷ்ணன் வரவேற்றார். பேராசிரியர் முகம்மது இபுராகிம் நன்றி கூறினார்.

ஏற்பாடுகளை பேராசிரியர்கள் அக்பர்ஜஹான், ஆனந், நாசர் செய்திருந்தனர். இதில் 300க்கும் அதிகமான மாணவ, மாணவிகள், பெற்றோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.