Saturday, July 20, 2013

தேசிய அடையாள அட்டை பதிவு!கீழக்கரையில் தற்காலிக மையம் அமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல் !



கீழக்கரையில்  தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கு பொதுமக் களின்  புகைப்படங்கள் எடுப்பட்டு விரல் ரேகைகள், கருவிழிகள் பதிவு செய்யப்பட்டன. இதற்கான பணியில் ஏராளமான பணியாளர்கள் ஈடுபட்டனர். ஆனால் கீழக்கரையில் 50 சதவீதம் பேர் தான் தேசிய அடையாள அட்டை  பெற பணிகளை நிறை செய்துள்ளார்கள் . இதில் விடுபட்டவர்கள் அதிகளவில் உள்ளனர். இவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது ரமலான் மாதத்தை தொடர்ந்து ஏராளமானோர் வெளிநாடு மற்றும் வெளியூர்களிலிருந்து சொந்த ஊரான கீழக்கரை திரும்பியுள்ளனர்.எனவே தற்போது கீழக்கரை நகரில் தற்காலிகமாக தேசிய புகைப்படம் எடுக்கும் பணிகளுக்கான சிறப்பு மையம் ஒன்றை அமைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து நகராட்சி துணை சேர்மன் ஹாஜா முகைதீன் கூறியதாவது,

தற்போது ரமலான் மாதத்தில் ஏராளமான எமதூர் மக்கள் விடுமுறைக்கு ஊரு திரும்பிய வண்னம் உள்ளனர்.இச்சமயத்தில் தேசிய அடையாள அட்டை பெறுவதற்கு புகைப்படம் எடுக்க மற்றும் பணிகளை மேற்கொள்ள சிறப்பு மையத்தை தற்காலிகமாக கீழக்கரை நகரில் ஏற்படுத்த கலெக்டர் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டு கொள்கிறேன்.இதன் மூலம் விடுபட்டவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்றார்


 

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.