Tuesday, July 2, 2013

துபாயில் வைரமுத்து!தமிழ் அமைப்பினர் சந்திப்பு!

 
 
 துபாய் வந்திருந்த கவிப்பேரரசர் வைரமுத்துவை அமீரகத்தைச் சேர்ந்த அனைத்து தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகளும் சந்தித்து பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்.சந்திப்பின் போது,
 
 
 எந்த ஒரு மனிதனின் சாதனைகளும் கடைசியில் ஒரு சில வரிகளாக வரலாற்றில் சுருங்கிவிடுமென்றும், அது தான் ஒரு மனிதனின் அதிகபட்ச சாதனை என்றும் கூறி, அனைவரும் ஒற்றுமையுடன் ஒன்றிணைந்து செயல்பட வலியுறுத்தினார்.

சந்திப்பில் ஈமான் குத்தாலம் லியாகத் அலி,

துபாய் தமிழ்ச் சங்கம் தாஹா,

அமீரக தமிழர் அமைப்பு அமுதரசன்,

சிம்மபாரதி,

காயிதே மில்லத் பேரவை ஹமீது ரஹ்மான்,

 பன்னாட்டு இஸ்லாமிய இலக்கிய கழகம் கீழைராஸா,

 அமீரக தமிழ் மன்றம் ஜெஸிலா ரியாஸ்,

உலக நகைச்சுவையாளர்கள் சங்கம் முகைதீன் பிச்சை

மற்றும் செய்தியாளர் முதுவை ஹிதாயத்

ஆகியோர் கலந்து கொண்டனர்.சந்திப்பின் போது கவிப்பேரரசருடன் இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்த அரிகேசவ நல்லூர் எஸ்.எஸ். மீரான் உடன் இருந்தார்.
 
முன்னதாக கவிப்பேரசரை சந்தித்த கவிஞர் அத்தாவுல்லா தான் எழுதிய நீலநதிப்பூக்கள் மற்றும் முகம்மது நபி (ஸல்) வாழ்க்கை வரலாறு கவிதை நூல்களை அவருக்கு வழங்கினார். அத்தாவுல்லாவின் எழுத்து திறனை வைரமுத்து பாராட்டினார்.     

1 comment:

  1. oh......appa keelakarai news illai.....ah ah ah

    by
    seyed

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.