Tuesday, July 9, 2013

கீழக்கரை நகராட்சி அதிமுக துணை தலைவர் உள்பட 11 கவுன்சிலர்கள் கைது!




கீழக்கரை நகராட்சி அதிமுகவின் துணை தலைவர் ஹாஜா முஹைதீன் உள்பட  11 கவுன்சிலர்கள் கைது!

கீழக்கரை நகராட்சி கவுன்சில் கூட்டம், நேற்று காலை 11.30க்கு நடைபெறுவதாக கவுன்சிலர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டது. கவுன்சிலர்கள் 13 பேர், காலை 11.45 மணிக்கு அரங்கிற்கு சென்ற போது, கூட்டம் முடிந்து விட்டதாக அறிவித்தனர்.


விரக்தி அடைந்த கவுன்சிலர்கள் அரங்கில் அமர்ந்து நகராட்சி தலைவர்(அ.தி.மு.க.,) ராவியத்துல் கதரியாவின் கணவர் அமீர் ரிஸ்வான் மற்றும் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கோஷமிட்டபடி, உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

கமிஷனர் அயூப்கான், போலீசில் புகார் செய்தார். டி.எஸ்.பி., சோமசேகர் கவுன்சிலர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். கலெக்டர் வரும் வரை, தொடர்ந்து உள்ளிருப்பு போரட்டம் நடத்தப்போவதாக 13 பேரும் தெரிவித்தனர்.
இதில் துணைத் தலைவர் ஹாஜாமுகைதீன்(அ.தி.மு.க.,) கவுன்சிலர்கள் முகைதீன் காதர்(அ.தி.மு.க.,), சாகுல் ஹமீது(தி.மு.க.,), அஜ்மல்கான்(காங்.,) மற்றும் சுயேட்சைகள் உட்பட 11 பேரை, போலீசார் கைது செய்தனர். நகராட்சியில் இருந்து போலீஸ் ஸ்டேஷன் வரை நடத்தி செல்லப்பட்டனர்.

சுயே., ஜெயப்பிரகாஷ் கூறுகையில், ""அஜண்டாவில் பல தீர்மானங்களை எதிர்க்க திட்டமிட்டு இருந்தோம். இதையறிந்த நகராட்சி தலைவர் ராவியத்துல் கதரியா, நாங்கள் அரங்கிற்கு வரும் முன், கூட்டம் நடத்தி தீர்மானங்களை நிறைவேற்றிவிட்டார்.
கமிஷனர், அலுவலர்கள் உடந்தையாக இருந்துள்ளனர். நகராட்சி நிர்வாகம், தலைவரின் கணவர் அமீர் ரிஸ்வான் உத்தரவுபடியே செயல்படுகிறது,''என்றார்.

கமிஷனர் கூறுகையில், ""எட்டு கவுன்சிலர்களை கொண்டு காலை 11.30 மணி முதல் 11.55 வரை கூட்டம் நடந்தது. நிர்வாகத்தில் யார் தலையீடும் இல்லை,'' என்றார்.
நகராட்சி கமிஷனரின் புகாரின் பேரில் கைது செய்யப்பட்ட அனைவரும் இன்று மாலை விடுதலை செய்யப்பட்டனர்.


 

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.