நகராட்சி நிர்வாகத்தின் முறைகேடுகளை எதிர்த்து குரல் எழுப்பியதால் தங்கள் வார்டுகளில் குப்பை அள்ளும் பணி ஒரு வாரமாக நிறுத்தப்பட்டுள்ளது என கீழக்கரையில் கவுன்சிலர்கள் புகார் தெரிவித்துள்ளனர். தெருக்களில் குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள் குவி ந்து கிடப்பதால் துர்நாற்றம் வீசி வருகிறது.
. நகராட்சி தலைவரின் நடவடிக்கையைக் கண்டித்து 13 கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது இந்த 13 கவுன்சிலர்களின் வார்டுகளும் புறக்கணிக்கப்படுவதாக மீண்டும் சர்ச்சை கிளம்பியிருக்கிறது. கடந்த ஒரு வார கால மாக, இந்த 13 வார்டுகளிலும குப்பைகள், கழிவுகள் அகற்றப்படாமல், தெருக்க ளில் குவிந்து கிடப்பதாகவும். இதனால் தொற்றுநோய்கள் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளதாக கவுன்சிலர்கள் புகார் தெரிவித்துள்ளனர். பழுதான தெரு விளக்குகளை சரி செய்யும் பணிகளும் கிடப்பில் உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஐந்தாவது வார்டு கவுன்சிலர் சாகுல் ஹமீது கூறுகை யில்,
கீழக்கரையில் நகராட்சி கூட்டம் கடந்த 9ம் தேதி நடந்தது. நகராட்சியில் நடந்த முறைகேடுகள் தொடர் பாக இந்தக் கூட்டத்தில் பிரச்னையை கிளப்ப துணைத்தலைவர் ஹாஜாமுகைதீன்(அதிமுக) உள்ளிட்ட கவுன்சிலர்கள் திட்டமிட்டு இருததை அறிந்து கொ ண்ட நகராட்சி தலைவர் மற்றும் ஆணையாளர், அறிவிக்கப்பட்ட நேரத்துக்கு முன்னதாகவே கூட்டத்தை நடத்தி முடித்ததாக அறிவித்தனர்
. மேலும் எனது வார்டு பகுதியில் ஒரு வாரமாக குப்பை கள் அகற்றப்படாமல் கிடக்கின்றன. தெருக்களில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இதனால் கொசு தொல்லை அதிகரித்து வரு கிறது. சுகாதார ஆய்வாளரிடம் புகார் தெரிவித்தோம். ஒப்பந்ததாரர் முறையாக பணி செய்யவில்லை என்று எழுதி கொடுத்தால் தான் குப்பைகளை எடுக்கச் சொல்வேன் என்கிறார்,” என்றார்.
ஒப்பந்ததாரர் ஆறு முகம் கூறுகையில்,
“துப் புரவு பணிக்கு, நபர் ஒருவருக்கு ரூ.241 என்ற அடிப்படையில் டெண்டர் எடுத்து வேலை செய்கிறோம். கடந்த இரண்டு மாதங்களாக பில் பணம் கொடுக்கவில்லை. 20 சதவீதம் கமிஷன் கொடுத்தால்தான் பில் பணம் தருவோர் என்கிறார்கள்.
இதனால் தொழிலாளர்களுக்கு பணம் தர முடியவில்லை. மேலும், உன்னுடைய ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டோம். இனி வேலை பார்த்தால் பணம் தரமாட்டோம் என்கின்றனர். அதனால் தான் குப்பைகளை அகற்றவில்லை என்றார்.
இது குறித்து நகராட்சி தலைவர் ராவியத்துல் காதரியா தரப்பில் கேட்ட போது,
வேண்டுமென்றே யாருடைய வார்டும் புறக்கணிக்கப்படவில்லை ஆட்கள் பற்றாக்குறையால் தான் தனியாருக்கு விடப்பட்டது .ஆனால் குறிப்பிட்ட வார்டு பகுதிகளில் துப்புரவு பணிகளை மேற்கொள்ள டெண்டர் எடுத்த தனியார் நிறுவனம் பணிகளை சரியாக செய்யவில்லை .இது குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்ட்டு வருகிறது விரைவில் மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு இப்பிரச்ச்னை தீர்க்கப்படும்.மேலும் உடனடி நடவடிக்கையாக குப்பைகள் அனைத்து அகற்றப்படும் என்றார்
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.