Friday, July 12, 2013

கீழக்கரையில் இலவச மருத்துவ முகாம்!300க்கும் மேற்பட்டவர்கள் பயனடைந்தனர்




கீழக்கரை ரோட்டரி சங்கம்,முஹம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி ரோட்ராக்ட் சங்கம்,முகைதீனியா மெட்ரிக் பள்ளி, மற்றும் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை இணைந்து நடத்திய பள்ளி கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கான இலவச மருத்துவ பரிசோதனை முகாம் முஹைதீனியா மெட்ரிக் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

ரோட்டரி சங்கத்தின்முன்னாள் துணை ஆளுநர் சின்ன துரை அப்துல்லா முகாமை துவக்கி வைத்தார்.


கீழக்கரை ரோட்டரி சங்க தலைவர் டாக்டர் ராசிக்தீன் தலைமை வகித்தார்.செயலாளர் சுப்ரமணியன்,இணை செயலாளர் செய்யது அஹமது,முன்னாள் தலைவர் ஆசாத்,முஹம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் அலாவுதீன்,வடக்கு த்தெரு ஜமாத் துணை செயலாளர் ஜாஹிர் உசைன்,உப தலைவர் அஹமது மிர்ஷா,முகைதீனியா பள்ளி நிர்வாக குழு நிர்வாகி முகைதீன் இப்ராஹிம் தம்பி வாப்பா,பசீர் அஹமது,ரோட்ராக்ட் தலைவர் மரியதாஸ் மற்றும் பட்டய செயலார் பாலசுப்பிரமணியன்,நகர் நல பொருளாளர் ஹாஜா அணீஸ்,பசீர் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்


முகாமில் 300க்கும் மேற்பட்டவர்களுக்கு மீனாட்சி மிஷன் மருத்துவமனை டாக்டர்கள் விஜயலட்சுமி,மதன் ஒருங்கினைபாஅளர் உள்ளிட்ட 12 பேர் மருத்துவ பரிசோதனை செய்தனர்

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.