Friday, July 12, 2013

தரமில்லாத குடிநீர் குழாய்கள் பதிப்பதாக காண்ட்ராக்டருக்கு கவுன்சிலர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் கடும் எதிர்ப்பு!ழக்கரையில் 7, 9 மற்றும் 10வது வார்டுகளுக்கு உட்பட்ட மீன்கடை தெரு , கஸ்டம்ஸ் சாலை உள்ளிட்ட பகுதிகள்  1,400 மீட்டர் தூரத்திற்கு குடிநீர் விநியோக குழாய்கள் பதிப்பதற்கு நகராட்சி பொதுநிதியில் ரூ.5 லட்சம் ஒதுக்கப்பட்டு, குடிநீர் குழாய் பதிக்கும்   பணிக்கான ஆணை, ஒப்பந்ததாரர் பழனிக்கு வழங்கப்பட்டது.
. தற்போது இப்பகுதிகளில் குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணி நடந்து வருகிறது. நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணியளவில் மீன்கடை தெரு பகுதியில் ஜேசிபி மூலம் சாலையை தோண்டி குடிநீர் விநியோக குழாய்கள் பதிக்கும் பணி நடந்தது

 நள்ளிரவில் மண்அள்ளும் இயந்திரத்தின் உதவியுடன் ரோட்டை உடைத்து குடிநீர் குழாய் பதிக்கும் பணி நடந்ததால் பொதுமக்கள் தூங்க முடியாமல் அவதியடைந்தனர். நகராட்சி பொறியாளர், பணி நடக்கும் இடத்தில் இல்லாத நிலையில், விதிகளுக்கு மாறாக நேற்று முன்தினம், நள்ளிரவில் குழாய் பதிக்கும் பணி நடந்தது. இயந்திரத்தின் சப்தத்தால் பொதுமக்கள் தூங்க முடியாமல் சிரமப்பட்டனர்.

அப்பகுதி மக்கள்,  பணியை நிறுத்தக் கோரியும், செவிசாய்க்கவில்லை.மேலும் தரமில்லத பைப்களை புதைப்பதாக கூறி  வார்டு கவுன்சிலர்கள் அஜ்மல்கான், அன்வர்அலி, ஹாஜா முகைதீன் தலைமையில் பொதுமக்கள், ஒப்பந்ததாரரை முற்றுகையிட்டு அதிகாலை 4 மணி வரை வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.மேலும் கமிஷனர் வரும் வரை குழாய்களை பதிக்க கூடாது என வலியுறுத்தினர். 

இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து கவுன்சிலர்கள் நகராட்சி கமிஷனருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்ததும் கமிஷனர் ஐயூப் கான், தலைவர் ராவியத்துல் கதரியா மற்றும் நகராட்சி அலுவலர்கள், பணி நடந்த இடத்திற்கு வந்து மக்களிடம் விசாரித்தனர்.

கவுன்சிலர் அஜ்மல்கான் கூறுகையில்,

 குழாய்களை பதிக்க ஜேசிபியை பயன்படுத்தக் கூடாது. ஜேசிபி மூலம் தோண்டியதால், கழிவுநீர் குழாய்கள் உடைந்து விட்டன. சாலையில் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் நள்ளிரவில் ஒப்பந்ததாரர் குழாய்களை பதிக்க கூடாது. பகலில் நகராட்சி அதிகாரிகள் மேற்பார்வையில்தான் இப்பணிகள் நடைபெற வேண்டும். தற்போது ஒப்பந்ததாரர் பதிக்கும் இந்த குழாய்கள் தரமில்லாமல் உள்ளன. இந்த குழாய்களை கையால் அழுத்தினாலே உடைந்து விடுகிறது என்று தெரிவித்தார்.
கமிஷனர் கூறுகையில்,
நள்ளிரவில் பணி மேற்கொள்ள, ஒப்பந்ததாரருக்கு ஆணை எதுவும் வழங்கவில்லை.
இதுகுறித்து விசாரிக்கப்படும்,

அதிகாரிகள் குடிநீர் விநியோக குழாய்களை பார்வையிட்டனர். தரமான குழாய்கள் பதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் பொதுமக்களிடம் உறுதியளித்தனர்.

 கவுன்சிலர்களை ஒருமையில் பேசி ஒப்பந்ததாரர் திட்டியது குறித்து கவுன்சிலர் அஜ்மல்கான் போலீசில் புகார் செய்துள்ளார்.

1 comment:

 1. சவுக்கடி சாவன்னாJuly 13, 2013 at 12:44 AM

  இதில் கடைசி படம் கனரக வாகனங்கள் செல்லும் வள்ளல் சீதக்காதி சாலையிலிருந்து பழைய குத்பா பள்ளிக்குச் செல்லும் பிரதான சாலையின் கோலத்தை கண் குளிர காணலாம்.

  எந்த ஒரு பணி ஒப்பந்தமும் முடிவு செய்யும் போது பயன் படுத்தப்படும் பொருட்கள் ஐ.எஸ்.ஐ. தரம் பெற்றதாகவும், இத்தனை மில்லி மீட்டரில் தடிமன் (thickness) இருக்க வேண்டும் என கட்டாயம் குறிப்பிடுவார்கள்.சில சமயங்களில் தயாரிப்பு நிருவனத்தையும் குறிப்பிடுவார்கள். ஆக இது விஷயத்தில் குழப்பத்திற்கே சிறிதும் இடமில்லை, தில்லு முல்லு நடைபெறாத பட்சத்தில்.

  எந்த மடையானவது பணி ஆள் களை கொண்டு செய்ய வேண்டிய வேலையை இயந்திரம் கொண்டு செய்வானா? அதுவும் நடு இரவில். கீழக்கரை வீதிகளின் அமைப்பு இவர்களுக்கு அறியாத ஒன்றா?

  தில்லு முல்லு வெளிச்சத்திற்கு வந்து விட்டது. இப்போது இரவில் பணி புரிய உத்திர விடவில்லை. தரமான பைப்புகள் பதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வழக்கம் போல சப்பை கட்டுகிறார்கள்.

  (ஒரு வேளை இரவோடு இரவாக பைப்புகளை பதித்திருந்தால் என்ன நடவடிக்கை எடுப்பார்கள்?) மக்கள் பணம் அம்போ தான்!!!

  இறைவா இவர்களின் ......... எங்களுக்கு விடுதலையே இல்லையா? ஓட்டு போட்ட பாவத்தை தவிர வேறு எதை பெரிதாக செய்து விட்டோம், இவ்வளவு தூரம் நாங்கள் வதை படுவதற்கு.

  ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.