Monday, July 8, 2013

உடைந்துள்ள காவிரி கூட்டு குடிநீரை பைப்களை சீர் செய்யவும்,குடிநீர் விநியோகத்தை முறைப்படுத்தவும் எஸ்.டி.பி.ஐ கோரிக்கை!




கீழக்கரை அருகே காவிரி கூட்டு குடிநீர் பைப்பி ல் உடைப்பு ஏற்பட்டு வீணடிக்கப்படும் குடிநீர்.

கடும் வறட்சி நிலவுவதால் கடந்த சில மாதங்களாக ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வரும் காவிரி கூட்டுக்குடிநீர் அளவு வெகுவாக குறைந்துள்ளது. அதனால் ஏராளமான கிராமங்களுக்கு குடிநீர் சப்ளை இல்லை. ராமநாதபுரம், பரமக்குடி, ராமேஸ்வரம், கீழக்கரை போன்ற நகராட்சி பகுதிகளுக்கும் காவிரி கூட்டுக்குடிநீர் பாதியளவே சப்ளை செய்யப்படுகிறது.சில நேரங்களில் முற்றிலுமாக விநியோகம் இல்லை அதனால் பெரும்பாலான மக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர்.இதனால் கீழக்கரை உள்ளிட்ட நகராட்சிகளில் லாரி மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது.

இந்நிலையில் இத்திட்டத்தில் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டும், சேதமடைந்தும் பல இடங்களில் குடிநீர் வீணாவது தொடர்கிறது. சில இடங்களில் கிராம மக்கள் குளிக்கவும், ஆடு, மாடுகளுக்கும் பயன்படுத்துகின்றனர்.
 இதுபோன்றவற்றை உடனடியாக சரி செய்து, குடிநீர் முறையாக செல்ல காவிரி கூட்டுக்குடிநீர் திட்ட அலுவலர்கள் அல்லது தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் பராமரிப்பு பிரிவினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்


இது குறித்து கீழக்கரை எஸ்.டி.பி.ஐ நிர்வாகிகளில் ஒருவரன முஜீப் கூறியதாவது,

வெகு நாட்களாக காவிரி கூட்டு குடிநீர் கீழக்கரைக்கு சப்ளை செய்யப்படுவதில்லை .உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரி கீழக்கரை எஸ்டிபிஐ நகர் தலைவர் இஸ்ஹாக் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளார்.

 இது குறித்து ஜவஹிருல்லா.எம்.எல்.ஏ விடம் முறையிட்டும் இது குறித்து எவ்வித நடவடிக்கையும் இல்லை  மேலும் பல இடங்களில் காவிரி கூட்டு நீர் பைப்களை இருப்பு பாதையிலேயே  இணைப்புகளை  உடைத்து தண்ணீரை வீணடிக்கின்றனர்.இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். என்றார்.

 

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.