Thursday, July 11, 2013

கீழக்கரையில் பெண்களுக்கான புதிய பள்ளிவாசல் ('மஸ்ஜிது அல் கதீஜா') திறப்பு!







கீழக்கரை புதுக் கிழக்குத் தெருவை அடுத்த பெரிய காடு மனாஸில் கார்டனில் 'மஸ்ஜிது அல் கதீஜா' பெண்கள் தொழுகைப் பள்ளிவாசல். (05.07.2013) 3.30 மணியளவில் திறக்கப்பட்டு, அஷர் தொழுகை நடை பெற்றது.

இந்த பள்ளியை ஆர்கிடெக்ட் கபீர்  அழகிய வடிவில் வடிவமைத்து உள்ளார். இந்த விழாவிற்கு ஏராளமான பெருமக்கள் வருகை தந்து சிறப்பித்தனர்.

இந்த பள்ளிவாசலை பழைய குத்பா பள்ளி ஜமாத்தை சேர்ந்த சகோதரர்கள் க.அ.ம. உமர் சாகிபு மற்றும் க.அ.ம. சேகு மதார் சாகிபு (முக்தார்) ஆகியோர் இப்பள்ளிவாசல் உருவாக்குவதற்கு வேண்டிய அனைத்து ஏற்பாடுகளையும் செய்தனர்

இந்த பள்ளி வாயிலின் திறப்பு விழாவினை பழைய குத்பா பள்ளி இமாம் ஹைதர் அலி ஆலிம் மன்பயி  கிராத் ஓதி துவங்கி வைத்தார். ஜும்ம பள்ளி இமாம் கிராஅத்தின் விளக்க உரை அளித்தார்

 'மஸ்ஜிது கதீஜா' பள்ளியை க.அ.ம. உமர் சாகிபு திறந்து வைத்தார்

இந்த விழாவின் இறுதியில் மவ்லவி. அப்சலுல் உலமா. ஹாபிஸ். செய்யது அஹமது நெய்னா சித்தீகி ஆலிம் ஜமாலி அவர்கள் துஆ ஓதினார். நிகழ்ச்சியை லெப்பை தம்பி  தொகுத்து வழங்கியதுடன் முதல் பாங்கொலியையும் இனிமையாக முழங்கினார்.சதக், ஹாலிகுல் ஜமான், உல்லிட்ட பலர் விழா எற்பாடுகளை செய்திருந்தனர்.  தாருல் ஹுதா சார்பில் வருகை தந்த அனைவருக்கும் புத்தகம் வழங்கப்பட்டது

கீழக்கரை டவுன் காஜி காதர் பக்ஸ் ஹுசைன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள்,  பெண்கள் என ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


 இந்த பள்ளியின் பின் புறத்தில் முஹம்மது (ஸல்) அவர்கள் பெயரில் வணிக வளாகம் ஒன்றும் நிர்மாணிக்கப்பட்டு கட்டுமான பணிகள் நடை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.


இது குறித்து கீழக்கரையை சேர்ந்த பிலால் கூறுகையில்

நமதூரில் இதுபோன்று பள்ளிவாசல்,கல்விசாலைகளை அதிகளவில் உருவாக்க வேண்டும்.இது போன்ற பணிகளுக்காக தங்களை அர்பணித்து கொணட நல் இதயங்கள் நலமும் வளமும் பெற்று எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் என்றார்.

செய்தி மற்றும் படங்கள்: பிலால்

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.