Wednesday, July 24, 2013

"பல்லாங்குழி" சாலை! சீரமைக்க கோரிக்கை!


கீழக் கரை சொக்கநாதர் கோயில் தெரு சாலை குண்டும், குழி யுமாக உள்ளதால் பொதுமக்கள் கடும் அவதியடை ந்து வருகின்றனர்.

கீழக்கரையில் உள்ள முக்கிய சாலைகளில் சொக்கநாதர் கோயில் தெரு சாலையும் ஒன்று. 6 மாதங்களுக்கு முன்னர் இந்த தார் ச்சாலை புதிதாக போடப்பட்டது.
 
ஆனால் நகராட்சி நிர்வாகத்தினர் 3 மாதங்களு க்கு முன்னர் இந்த சாலை யை தோண்டி குடிநீர் விநி யோக குழாய்கள் பதித்த னர். இதனால் புதிதாக போடப்பட்ட இந்த தார்ச் சாலை தற்போது குண்டும், குழியுமாக உள்ளது. கீழக் கரை நகர் பகுதியை சேர்ந்த மாணவ, மாணவி கள் இந்த சாலையை கடந்து தான் தங்கள் பள்ளிகளுக்கு செல்ல வேண்டும்.
 
மேலும் நகரின் முக்கிய சாலை என்பதால் இந்த சாலையில் வாகன போக்குவரத்து அதிகம் உள்ளது. எனவே இந்த சாலையை உடனடியாக சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
 

 
நகர் காங்கிரஸ் தலைவர் ஹமீதுகான் கூறுகையில்,
 
சொக்கநாதர் கோயில் தெருவில் குடிநீர் குழாய் களை பதித்த பின்னர் தார் ச்சாலை போட வேண்டும் என கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.
 
ஆனால் நகராட்சி நிர்வாகத்தினர் அதை காதி லேயே வாங்கவில்லை. தார்ச் சாலை போட்டு விட்டு 3 மாதங்களில் அவர்களே சாலையை உடைத்து குடிநீர் குழாய்களை பதித்தனர்.
 
இதனால் மக்கள் பணம் வீணடிக்கப்பட்டுள்ளது. குடிநீர் குழாய்கள் பதித்தும் பயனில்லை. அவற்றில் தண்ணீரும் வருவதில்லை. பொதுமக்களின் நலன் கருதி உடனடியாக இந்த சாலையை சரி செய்ய வேண்டும். குடிநீரையும் சீராக விநியோகிக்க வேண்டும்� என்றார்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.