Friday, July 5, 2013

கீழக்கரையில் கடை உரிமையாளர்கள் மீது வழக்கு ! காவல்துறை நடவடிக்கை!

 
கீழக்கரை வள்ளல் சீதக்காதி சாலையில் நடைபாதை, சாலை பகுதிகளை ஆக்கிரமிக்கும் கடை உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என டிஎஸ்பி சோமசேகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
 
இது குறித்து அவர் கூறியதாவது: கீழக்கரை வள்ளல் சீதக்காதி சாலையில் நடைபாதை, சாலை பகுதிகளை ஆக்கிரமித்து கடை உரிமையாளர்கள் பொருட்களை கொட்டி விற்பனை செய்து வருகின்றனர். இதனால் போக்குவரத்திற்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுவதாக புகார்கள் வந்துள்ளன.
 
இதையடுத்து நேற்று நேற்று இன்ஸ்பெக்டர் கணேசன் தலைமையில் எஸ்ஐ கோட்டைசாமி மற்றும் போலீசார் சாலையில் பொருட்களை வைத்திருந்த 13 கடைகளின் உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். போலீசாரின் இந்த நடவடிக்கை தொடரும். தினமும் இப்பகுதியில் போலீசார் ரோந்து மேற்கொண்டு நடைபாதை, சாலை பகுதிகளை ஆக்கிரமிக்கும் கடை உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய உள்ளனர்.
 
மேலும் நடைபாதைகளை ஆக்கிரமித்து வாகனங்களை நிறுத்துவோர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றுவதற்கு தேவையான அனைத்து ஒத்துழைப்புகளையும் காவல் துறை அளிக்கும் என தாசில்தார், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், கீழக்கரை நகராட்சி கமிஷனர் ஆகியோருக்கு தகவல் தெரிவித்துள்ளோம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
 
 

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.