Monday, July 8, 2013

துபாயில் புதுக்கல்லூரி இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மெண்ட் முன்னாள் மாணவர்கள் சங்க வருடாந்திர சந்திப்பு நிகழ்ச்சி



துபாய் : துபாயில் புதுக்கல்லூரி இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மெண்ட்  முன்னாள் மாணவர்கள் சங்க வருடாந்திர சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
சங்க தலைவர் கீழக்கரை முஹம்மது அர்ஷத் தலைமை வகித்தார். ஷா நோஃபல் வரவேற்புரை நிகழ்த்தினார்

முன்னாள் மாணவர்கள் அனைவரையும் ஒருங்கிணைப்பது, வேலைவாய்ப்பு தேடி வரும் தங்களது கல்லூரி மாணவர்களுக்கு வழிகாட்டுவது, கல்வி மற்றும் சமுதாய மேம்பாட்டுப் பணிகளுக்கு உதவிடுவது உள்ளிட்ட பல்வேறு கருப்பொருள் குறித்து விவாதிக்கப்பட்டது.

அஹமத் முனவர் நன்றி கூறினார்.

நிகழ்வில் முன்னாள் மாணவர்கள் இஸ்மாயில் ஹஸன், ஷாகுல் ஹமீது, இம்ரான் முஹம்மது, ஜாஃபர் சாதிக், முஹம்மது ஜஸில், அஹமத் முனவர், அஹமது சாலிஹ், முஹம்மது அதிஃப், சித்திக் அஹமத், இம்தியாஸ் அஹ்மத், முஹைதின் குன்ஹி, ஜமால் முஹம்மது உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
 

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.