Wednesday, July 17, 2013

கீழக்கரை பள்ளிகளில் கல்வி வளர்ச்சி நாள் நிகழ்ச்சி !



காமராஜரின் 111வது  பிறந்த நாளை முன்னிட்டு கீழக்கரையில் கல்வி வளர்ச்சி நாளாக பள்ளிகளில் கொண்டாடப்பட்டது.

கீழக்கரை முஹைதீனியா மெட்ரிக் பள்ளி மாணவர்கள் கல்வி குறித்து விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.

டி.எஸ்பி சோம சேகர் தலைமை தாங்கி பேரணியை துவங்கி வைத்தார். இன்ஸ்பெக்டர் கனேஷன்,துனை தலைவர் முஹைதீன் இப்ராஹிம் என்ற தம்பிவாப்பா,பள்ளி செயலாளர் டாக்டர் ராசீக்தீன்,இணை செயலாளர் அஹமது மிர்ஷா,பொருளாளர் பசீர் அஹமது ரோட்டரி சங்க செயலாளர் சுப்பிரமணியன் மற்றும் நிர்வாகிகள் செய்ய அஹமது சதக்கத்துல்லா, ஹசன், மக்கள் நல அறக்கட்டளை ஹாஜா அணீஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்

கீழக்கரை மஹ்தூமியா உயர்நிலைப்பள்ளியில், கல்வி வளர்ச்சி நாள் விழா தலைமை ஆசிரியர் கிருஷ்ணவேணி தலைமையில் நடந்தது. போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டன. கைத்தொழில் ஆசிரியர் பத்மாவதி நன்றி கூறினார்.

கைராத்துல் ஜலாலியா தொடக்கப்பள்ளியில் தாளாளர் டாக்டர் சாதிக் தலைமை வகித்தார்.கைராத்துல் ஜலாலியா மேல்நிலைப்பள்ளியில் தாளாளர் செளகர் சாதிக் தலைமை வகித்தார்.
முன்னாள் தாளாளர்கள் செய்யது இபுராகிம், மஹமூது கரீம்,  முதுகலை ஆசிரியர் சையது அபுதாகிர் பேசினர். கிழக்கு தெரு ஜமாஅத் தலைவர் சேகு அபுபக்கர் சாகிபு, துணை தலைவர் அமீர், பொருளாளர் அஜ்ஹர், கல்விக்குழு உறுப்பினர்கள் சுஐபு, ஹூசைன் அப்துல் காதர் கலந்து கொண்டனர். மாணவிகளுக்கு கல்வி உதவி தொகை, உபகரணங்கள் வழங்கப்பட்டன.



கீழக்கரை அருகே மாவிலாதோப்பு நாடார் நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் அன்பு செல்வன் தலைமை வகித்தார்.கல்விக்குழு தலைவர் கிருஸ்ணமூர்த்தி மற்றும் ஆசிரியர்கள் முன்னிலை வகித்தனர்.
 

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.