Saturday, July 6, 2013

கீழக்கரை பள்ளிகளின் சிறப்பான செயல்பாடு பாராட்டி ரோட்டரி சங்கம் விருது !


 
 
கீழக்கரையில் ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, 21 விருதுகள் பெற்ற சங்கத்திற்கு பாராட்டு விழா என முப்பெரும் விழா நடந்தது.
 
கீழக்கரை ஹூசைனியா மண்டபத்தில் நடந்த இந்த விழாவுக்கு ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் ஆசாத் தலைமை வகித்தார். முகம் மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் அலாவு தீன் வரவேற்றார். மாவட்ட ஆளுநர் தேர்வு அசோக் பத்மராஜ், துணை ஆளுநர் முருகேசன், ராமநாதபுரம் பசுமை இந்திய இயக்க தலைவர் தீனதயாளன், நகராட்சி துணைத்தலைவர் ஹாஜா முகைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 
புதிய தலைவர் டாக்டர் செய்யது ராசிக்தீன், செயலாளார் சுப்ரமணியன் ஆகியோருக்கு மாவட்ட ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
திருவனந்தபுரத்தில் நடந்த மாவட்ட விருதுகள் வழங்கும் விழாவில் கீழக்கரை ரோட்டரி சங்கம் சிறப்பாக செயல்பட்டதற்காக மண்டல அளவில் 17 விருதுகளும், மாவட்ட அளவில் 4 விருதுகளும் பெற்றுள்ளது. விருதுகளை மாவட்ட ஆளுநர் ஷாஜஹான் வழங்கினார்.
 
விழாவில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன. 2 பேருக்கு தையல் மிஷின், ஊனமுற்ற ஒருவருக்கு 3 சக்கர வாகனம் வழங்கப்பட்டது. 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் கீழக்கரையில் உள்ள பள்ளிகளில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் தாளாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
 
விழாவில் கீழக்கரை ரோட்டரி சங்க நிர்வாகிகள் செய்யது இபுராகிம், ஹசன், சதக்கத்துல்லா, செல்வம், முகம்மது சதக் பாலிடெக் னிக் ரோட்ரக்ட் பாலசுப்பிரமணியன், அப்பாஸ் மாலிக் மற்றும் முகம்மது சதக் பொறியியல் கல்லூரி முதல்வர் முகம்மது ஜகாபர், கைரத்துல்ஜலாலியா மேல்நிலைப்பள்ளி தாளாளர் டாக் டர் சாதிக், ரோட்டரி நிர்வாகிகள் டாக்டர் சின்னதுரை அப்துல்லா, தினேஷ்பாபு, ரமேஷ்பாபு, வழக்கறிஞர்கள் முனியசாமி, பார்த்தசாரதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.