Thursday, July 11, 2013

இன்று கீழக்கரையில் மின் தடை ரத்து!மின் இலாகவிற்கு தமுமுக நன்றி


இன்று மாதாந்திர பரமரிப்பு  பணி காரணமாக மின்தடை என்று கீழக்கரை டைம்ஸ் மற்றும் அனைத்து பத்திரிக்கைகளிலும் செய்தி நேற்றைய தினம் வந்தது. இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலானின் முதல் நாள் என்பதால் ஊர் மக்கள் சிறப்பான உணவுகள் ஏற்பாடு செய்யவும் மற்ற ஏற்பாடுகளுக்கும் மின்சாரம் மிக அவசியம் என்பதால் மின்வாரியம் இன்று மின்தடை செய்யாமல் வேரேரு நாளில் மாதாந்திர பணி செய்ய வேண்டுமென தமுமுக உள்ளிட்ட பல்வேறு தரப்பினார் கோரிக்கை விடுத்திருந்தனர்


இது குறித்து தமுமுக நகர் தலைவர் சிராஜீதீன் கூறியதாவது,

 மேல் குறிப்பிட்ட காரணத்தை மனுவாக எழுதி கீழக்கரை மின்வாரிய அதிகாரியிடம் கொடுத்து வேண்டு கொள்வைத்தோம் அதனை ஏற்று கொண்ட அதிகாரி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.

ஊர் மக்கள் பிரச்சனைகளை அறிந்து உடனே நாங்கள் நடவடிக்கை எடுத்தோம். எங்கள் வேண்டுகோளை ஏற்று மின்வாரியம் இன்று மின்தடை செய்யாமல் வேரேரு நாளில் மாதாந்திர பணி செய்யமாற்றியதற்கு மின்வாரிய அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்து மற்றும் அனைவருக்கும் புனித ரமலான் நல்வாழ்த்துகளை அன்புடன் தெரிவித்தார். பேட்டியின் போது நகர் செயலாளர் பவுசுல் அமீன் ஒன்றிய செயலாளர் சாதிக் மமக செயலாளர் இக்பால் துணை செயலாளர் சலீம் மற்றும் புகாரி PRO கமால் நாசர் மற்றும் அன்பின் அசன் வளைகுடா நிர்வாகி கீழை. இர்பான். உடன் இருந்தனர்

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.